Historical EventsNationNews

ட்றம்பரின் மீள் வருகை – Popular votes அவர் வெற்றி

Getting your Trinity Audio player ready...

ட்றம்பர் வரலாற்று வெற்றியடைந்திருக்கிறார். electoral college votes களில் மட்டுமல்ல popular votes இலும் அவரது வெற்றி கணிசமானது. 1880 இற்குப் பிறகு இப்போதுதான் ஒரு தவணை இடைவெளிக்குப் பிறகு தோற்ற ஒருவர் மீண்டும் வந்திருக்கிறார். இதற்குக் காரணம் வாக்காளர்களின் ட்றம்ப் மீதான பற்று அல்ல பைடன் + கமலா மீதான வெறுப்பு. அதற்காக இவ்வெற்றி குடியரசுக்கட்சிக்கு உரியது என்பதுமல்ல. இது தனியே ட்றம்பிற்குரியது. இதுவரை காலமும் அமெரிக்க அரசியலைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த establishment, மிகவும் தீர்க்கமான முறையில், தனது ஆதிக்கத்தை சாமானியர்களிடம் இழந்திருக்கிறது. சமூக ஊடகங்கள் எனப்படும் citizens journalism இதற்கு ஒரு முக்கிய காரணம். ட்றம்ப் better of the two evils. அந்த வகையில் ஒரு சிறு மகிழ்ச்சி.

‘ட்றம்ப் ஒரு பைத்தியக்காரன். மண்டைக்குள் ஒண்டுமில்லை’, ‘பொய்யன்’, ‘காமுகன்’, ‘பெண்களை மதிக்காதவன்’ என்றெல்லாம் பல நண்பர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். அதில் பல உண்மைகளாகவும் இருக்கலாம். அமெரிக்காவில் எந்த கொம்பன் அல்லது எந்த மடயன் ஆட்சிக்கு வந்தாலும் அவர் ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்ட தண்டவாளத்தில் ஓடும் ரயில் தான். அமெரிக்க அரசியலமைப்பு என்ற guard rail மிகவும் காத்திரமானது. ரயிலை எவ்வளவு விரைவாக ஓட்டுவது, எங்கு நிறுத்துவது, எங்கு எப்போது சிக்னல்களைப் போடுவது என்பதைக் கட்டுப்படுத்துவது ஒரு கூட்டம் (establisment). அதில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விடயம். 80% மான காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இந்த கூட்டமே தீனி போடுவதால் இந்த ரயில் operation இல் அக்கூட்டத்திற்கு பெரும் பங்குண்டு. 2024 இற்கு முந்திய தேர்தல்களின் முடிவுகள் எல்லாம் இக்கூட்டத்தின் திட்டத்தின்படியே நடந்து வந்தன. ஆனால் இம்முறை இக்கூட்டத்தின் திட்டம் நிறைவேறவில்லை

Watch Donald Trump’s full election night speech – டொனால்ட் டிரம்பின் முழு தேர்தல் இரவு உரையைப் பாருங்கள்

ட்றம்ப்பின் வெற்றிக்கு ட்றம்பை விட கமலாக்காவே முக்கிய காரணம். ட்றம்ப் ஸ்கிறிப்ட் இன்படி பேசுபரல்ல. வாய்க்கு வந்தபடி அவர் பேசுவதை மக்கள் சீரியஸாக எடுத்துக்கொள்வதுமில்லை. இவர்கள் பேசும் விடயங்கள் establishment இன் ஊடகங்களை அலங்காரிக்க மட்டுமே. இவ்விடயத்தில் அவர் படிக்காத ஒருவராகவே பார்க்கப்படுபவர். அதனால் வாக்காளர்களில் பலர் அவரைத் தம்மில் ஒருவராகவே பார்க்கப்பழகியிருந்தனர். காம லீலைகளில் ட்றம்பை விட மேதைகள் ஜனநாயகக் கட்சியில் இருக்கிறார்கள். பில் கிளின்ரன் முதல், இஸ்ரேலின் ஏஜண்டாகிய எப்ஸ்டீனின் மாளிகையில் கேளிக்கைகளில் ஈடுபட்ட பலர் ஜனநாயகக் கோட்டையில் தவழ்பவர்கள். ஜோ பைடனின் மகன் யூக்கிரெய்ன் இலஞ்ச ஊழலில் மாட்டிய ஒரு போதை வஸ்து வியாபாரி. வெள்ளை மாளிகையிலேயே போதை வஸ்து வைத்திருந்தவர். எனவே ட்றம்பை விமர்சிக்கக்கூடிய தார்மீக பலம் ஜனநாயகர்களிடையே எவருக்குமே இல்லை. எனவே உறுதியான தண்டவாளங்கள் இருக்குமட்டும் கமலா ரயிலோ அல்லது ட்றம்ப் ரயிலோ ஓடியே ஆகும்.

பெரும்பான்மை வெள்ளை இன நாடாக இருந்த அமெரிக்கா இப்போது சிறுபான்மை வெள்ளை இன நாடாக மாறிவருகிறது. விரைவில் லத்தீனோ இனம் பெரும்பான்மையாகித் தாம் இழந்த நிலங்களை மீளப்பெற்றுவிடும். இந்நிலையில் கமலாக்காவின் handlers எதிர்பாராத வகையில் லத்தீனோக்கள், பெண்கள், கறுப்பின மக்கள், இடதுசாரி சிந்தனை கொண்டோர், மத சிறுபான்மையினர் ஆகியோரின் வாக்குகளில் கணிசமான தொகை ட்றம்பிற்குப் போய்விட்டது. லத்தீனோக்கள் உள்ளே வராது வேலியடைத்தவர் ட்றம்ப். அவர்களைத் திருப்பி அனுப்பப்போவதாகத் தேர்தலுக்கு முன்னர் வரையும் சூளுரைத்து வந்தவர். அப்படியிருந்தும், பைடன் சென்ற தடவை வெற்றியீட்டியிருந்த பென்சில்வேனியா மாநிலத்தில், லத்தீனோ வாக்காளர்கள் 48% ட்றம்பிற்கு வாக்களித்திருக்கிறார்கள். 2020 இல் இவர்களில் 22% பைடனுக்கு வாக்களித்திருந்தவர்கள். கமலாக்காவிற்கு பாலஸ்தீனிய குழந்தைக் கொலைகளுக்கும் மளிகைப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வித்தியாசமே இல்லை என்னுமளவுக்கு அவரது மனம் கல்லாகியிருந்தது. பெரும்பாலான இளையோர் ட்றம்பிற்கு வாக்களித்தமைக்கு காரணம் பாலஸ்தீனக் கொடுமைகள். கமலாக்கா அதைக் கண்டும் காணாதவாறு பயணித்ததைக் கண்ட எவரும் அவருக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள்.

எனவே இந்த தடவை ட்றம்ப் வெற்றியீட்டியதற்கு அவரை விட கமலாக்காதான் காரணம். கமலாக்கா மட்டுமில்லை அவருக்குப் பதிலாக ஒரு ‘வெள்ளை ஆண்’ நின்றிருந்தாலும் அவர் தோற்றுத்தான் போயிருப்பார். காரணம் இது குடியரசுக்காரரின் ஆதரவு அலை என்பதைவிட ஜனநாயகத்தாரின் எதிர்ப்பலை என்றுதான் கூறவேண்டும். சித்தாந்த ரீதியில் ட்றம்ப் குடியரசுக் காரருமல்ல, ஜனநாயகருமல்ல. அவர் ஒரு தனி அடையாளம். ‘அமெரிக்க முதல்’ வாதத்தை அவர் கையில் செருகி ஓடவிட்ட ஸ்டீவ் பனன் போன்றோரே அவரது நடத்துனர்கள். ஏனையோர்கள் ‘இஸ்ரேல் முதல்’ வாதத்திற்குள் அகப்படுபவர்கள்.

‘கமலாக்கா வந்திருந்தால் அது அமெரிக்காவின் இன்னுமொரு புரட்சி. ஒரு பெண்ணை அதுவும் வெள்ளையல்லாத பெண்ணை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியது’ எனப் புளகாங்கிதமடைவதற்கு எம்மவர் பலர் காத்திருந்தார்கள். பாவம் கமலாக்கா அவர்களை ஏமாற்றி விட்டார். இதில் பல காரணிகள் உண்டு. முதலாவதும் முக்கியமானதும் அவரது இஸ்ரேல் ஆதரவு. இஸ்ரேலின் கொடுமைகளுக்கு எதிராக உலகமே திரண்டெழுந்து ஆர்ப்பரிக்கிறது என்பதை அவர் பார்க்க மறுத்தமை. இதனாலேயே பெரும்பாலான இளைய சமுதாயம் ட்றம்பர் பக்கம் திரும்பியிருந்தனர். இரண்டாவது, பெண் விடுதலைக் காரரின் முகாம் பெரிதென நினைத்து அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தமை. அப்படியிருந்தும் 57% பெண்களே அவருக்கு (கறுப்பின பெண்கள் மிகவும் அதிகம்) ஆதரவாக வாக்களித்திருந்தனர். அமெரிக்க பொருளாதாரம் பற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இதற்குள் மூளை கலங்கிப் போன நிலையில் பைடன் அவ்வப்போது விடும் வாண வேடிக்கைகள் கமலாக்காவை வீழ்த்துவதெற்கென்றே விடப்பட்டவையா எனுமளவுக்கு வேடிக்கையானவை.

இங்கு citizen journalism த்தின் பங்கும் முக்கியமானது. கமலாக்காவின் control tower இல் யார் கடமையில் இருந்தார்கள் என்பது தெரிந்த விடயம். அவரது வெற்றிக்கெனப் பணத்தை அள்ளி இறைத்தவர்கள் அனைத்து பெருமூடகங்களையும் மைக்கிரோ கொண்ட்றோளில் வைத்திருந்தார்கள். பாலஸ்தீனத்துச் செய்திகளை விட உள்ளூர் ‘அண்டி செமெட்டிக்’ செய்திகளே முற்பக்கங்களை நிரப்பி வந்தன. ஆனால் இதையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு இலான் மஸ்கின் ‘எக்ஸ்’ சமூக ஊடகம் பாரதூரமான கட்டுப்பாடுகள் எதுவுமின்றி பாலஸ்தீன களநிலவரத்தைப் பிரசுரித்தது. உண்மை அனைத்து வீடுகளின் கதவுகளையும் திறந்தது. இதே வேளை முகநூல், யூ-டியூப் போன்ற ஊடகங்கள் இஸ்ரேல் ஆதரவு செய்திகளை மட்டுமே பொறுக்கியெடுத்துப் பிரசுரித்தன. இஸ்ரேலிய படத்துடன் நான் போட்ட பதிவொன்றை முகநூல் இரண்டு செக்கண்டுகளில் தூக்கி விட்டது. படத்தை மாற்றிப் பதிவேற்றியதும் அதை மறுப்பின்றி ஏற்றிக்கொண்டது. அந்தளவுக்கு இஸ்ரேலிய அனுதாபிகள் நிறைந்தவை பெருமூடகங்கள். இந்த விடயத்தில் கமலாக்கா கப் சிப்காக இருந்துவிட்டார்.

கமலாக்கா, ஆரம்பத்தில் தன்னை ஒரு இந்திய வம்சாவளியாகக் காட்டிக்கொண்டவர். பின்னர் கறுப்பினப் பெண்மணியாகவும் இறுதியில் தனது கணவர் ஒரு யூதர் எனவும் காட்டிக்கொள்ள முற்பட்டவர். இதுவும் அவ்வப்போ வெள்ளையினத்தவராலும், சில முஸ்லிம்களாலும் சமூக வலைத் தளங்களில் சுட்டிக் காட்டப்பட்டன. அமெரிக்காவில் முஸ்லிம்களினதும் அரபுக்களினதும் எண்ணிக்கை கணிசமானது. ட்றம்ப் முகாம் சாமர்த்தியமாக இவர்களைக் கவர்ந்து கொண்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அவர் குரலெழுப்பியிருந்தும் அவர்கள் ட்றம்ப் பக்கமே நின்றனர். அவர்களைத் தன்பக்கம் இழுக்க கமலாக்கா எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. எனவே அவரின் தோல்விக்கு அவரே முழு முதல் பொறுப்பு.

ட்றம்ப் தன்னை ஒரு சர்வாதிகாரியாகக் கனவு காண்பவர். வட கொரியாவிற்குப் போய் வந்த பின்னர் அவருக்கு இந்த ஆசை அதிகம். இந்த தவணையில் அமெரிக்காவைப் பலமாக்கித் தனது கனவை நனவாக்க முயற்சிக்கலாம். அமெரிக்காவைப் பலப்படுத்துவதற்கு அவர் எடுக்கும் முதல் முயற்சி போர்களை நிறுத்துவதும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு வழங்கிவரும் உதவிகளை நிறுத்துவதும். வளர்ந்து வரும் பல்துருவ ஒழுங்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுபடாது. எனவே ஆயுதப் போர்களை விடுத்து பொருளாதாரப் போர்களினாலேயே அவர் தனது பலத்தைக் காட்ட விளைவார். இதனால் அமெரிக்கத் தலைமையில் இயங்கும் நாடுகள் உடபடப் பல நாடுகள் பாதிக்கப்படும். நேட்டோ பலவீனப்படும். இதனால் உலகில் சமாதானம் தோன்ற வழி சமைக்கப்படும். பாலஸ்தீனப் போர் அமெரிக்கா மீதான இஸ்ரேலின் அழுங்குப்பிடியை வெளிக்காட்டிவிட்டது. விழித்தெழுந்த அமெரிக்க தேசியவாதிகள் ட்றம்பின் தலைமையில் ‘இஸ்ரேலிய ஆதிக்க ஒழிப்பு’ போரையே முன்னெடுப்பார்கள். அமெரிக்கத் தெருக்களில் வெள்ளையர்கள் யூதர்களைப் பகிரங்கமாகக் கேவலப்படுத்துவது சாதாரண விடயமாகிவிட்டது. பெருமூடகங்கள் இவற்றை மறைத்தாலும் சமூக ஊடகங்கள் இவற்றை வெளிக்கொணர்கின்றன. இத் தீ பற்றி எரியப் பல காலமில்லை. உலகம் முழுவதும் நாஜிகளின் மீளெழுச்சி ட்றம்பரின் ஆட்சியில் உச்சம் பெறும். அதற்காக ஹிட்லர் மறுபிறப்பெடுத்திருக்கிறார் என்று நினைத்தால் மறுக்கவா முடியும்?.

credit:நன்றி மறுமொழி