தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் சட்டம் 104 மீளப்பெறப்படுமா?
நெவில் ஹேவகே என்பவர் ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
இலங்கை அரசு சார்பில் ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்கடந்த சில வருடங்களாக உலகத் தமிழர், சிங்களவர் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசப்பட்டுவரும் ஒரு விடயம் கனடாவில், ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் தனியார் சட்டமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட ‘தமிழ் இனவழிப்பு அறிவூட்டல் வாரம்’ சட்டம் 104.
இச் சட்டத்தை ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினர் திரு விஜே தணிகாசலம் தனியார் சட்டமூலமாகப் பிரேரித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் ஏகோபித்த ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுப் மே 12, 2021 அன்று சட்டமாக்கப்பட்டது. ஆனாலும் இலங்கை அரசு தனது தூதுவர் அலுவலக மூலமாகவும், கனடாவிலுள்ள சிங்கள மக்கள் சிலரது அமைப்புகள் மூலமாகவும் இதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. தற்போது நெவில் ஹேவகே என்பவர் இச் சட்டத்தை செல்லுபடியாகாமல் ஆக்கும்படி கோரி ஒன்ராறொயோ மாகாண அரசுக்கு எதிராக ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்துள்ளார். இவ் வழக்கு தொடர்பாக மாகாண அரசு தனது நிலைப்பாட்டை மார்ச் 21 க்கு முன்னர் தெரிவிக்க வேண்டும். எதிர்வரும் மே மாதம் 24-25 (2022) திகதிகளில் இவ் வழக்கின் மீதான விசாரணைகள் நடைபெறவுள்ளன.
இந் நிலையில் மாகாண அரசு என்ன செய்யப் போகிறதென எதுவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. இவ் வழக்குக்கு எதிராக கனடா வாழ் தமிழ் மக்களிடையே ஆதரவைத் திரட்டி வருவதாக கனடியத் தமிழர் தேசீய அவை அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. பல தமிழர் அமைப்புகளின் பெயர்கள் இவ்வறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் எப்படியான செயற்திட்டத்தைத் தாம் மேற்கொள்ளவிருப்பதாக அவ்வறிக்கை தெளிவுபடுத்தவில்லை.

இதே வேளை தமிழர் உரிமைக் குழு (Tamil Rights Group (TRG)) எனப்படும் புதிய அமைப்பொன்று நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் தான் இவ்விடயத்தில் ஒன்ராறியோ மாகாண அரசுக்கு உதவியாகச் செயற்படத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கிறது. இவ் விடயத்தில் மாகாண அரசின் நிலைப்பாடு என்ன என்பதோ அல்லது இவ்வமைப்பின் கோரிக்கைக்கு அரசு இணங்குமா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் மாகாண அரசினாலோ அல்லது அதன் உறுப்பினர் விஜே தணிகாசலத்தினாலோ வெளியிடப்படவில்லை.
104 சட்டத்தை மீளப்பெறக்கோரி நெவில் ஹேவகே பதிவு செய்த வழக்கின் உள்ளடக்கம் பற்றிய தகவல்கள் ‘தி தமிழ் ஜேர்ணல்’ வசம் இருக்கிறது. அதில் 104 சட்டத்தைப் பிரேரித்த உறுப்பினர் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளர் எனவும் அது கனடாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்பாகையால் அவர் பிரேரித்த சட்டத்தை அரசு அங்கீகரிக்கக்கூடாது என்ற சாராம்சத்தில் தமது பக்க நியாங்களைத் தெரிவித்துள்ளார்.
இதற்குத் தாம் பதிலளிக்கத் தயாராகவுள்ளதாகவும், இதன் பொருட்டுத் தாம் ஒரு வக்கீல் நிறுவனத்தை அமர்த்தியுள்ளதாகவும் தமிழ் உரிமைக் குழு எமக்குத் தெரிவித்துள்ளது. இது குறித்த கனடிய தமிழ்த் தேசிய அவையின் கருத்துக்களைப் பெற முடியவில்லை. மார்ச் 21 க்கு முதல் ஒன்ராறியோ அரசு பதிலளிக்குமா, அதே வேளை மே 24-25 இல் அது இவ் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமா என்பது போன்ற விடயங்கள் இதுவரை தெளிவாக்கப்படவில்லை. ஒன்ராறியோ அரசு இவ் வழக்கை எதிர்கொள்ளாது விடும் பட்சத்தில் 104 சட்டத்திற்கு என்ன நடக்கும் என்பதும் தொங்கு நிலையிலேயே உள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதமளவில் ஒன்ராறியோ பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் மாகாண அரசின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி இவ்வழக்கை ஆர்வத்தோடு எதிர்கொள்ளுமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.
கடந்த சில வருடங்களாக உலகத் தமிழர், சிங்களவர் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசப்பட்டுவரும் ஒரு விடயம் கனடாவில், ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் தனியார் சட்டமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட ‘தமிழ் இனவழிப்பு அறிவூட்டல் வாரம்’ சட்டம் 104.