தமிழர் உரிமைக்கான குழுமம் Tamil Rights Group GTA Information Session
TRG’s GTA Information Session JUN 24 and 25 2023
பதிவு: https://www.eventbrite.com/e/the-fight-for-eelam-tamil-rights-trgs-toronto-information-session-tickets-647702494597
அல்லது நேரில் செல்லவும்

இவர்களைப் பற்றிய குறிப்பு
தமிழர் உரிமைக்கான குழுமம் (Tamil Rights Group), மார்க்கம், கனடாவில் தலைமைச்செயலகத்தைக் கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு இலாபநோக்கற்ற நிறுவனமாகும் (பதிவு எண்: 1230398-1). அது அனைத்துலக சட்ட நடவடிக்கைகள், அகண்ட உலகளாவிய அரசியற் செயலாட்சி, இலங்கையிலே அரசியல் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய பொறிமுறைகள் ஊடாக, இலங்கையில் தமிழர்களுக்கான நிலைமாறு நீதிக்கும், பொறுப்புக்கூறலுக்குமான பரிந்துரைச் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த முனைகிறது. இந்தச் செயற்பாட்டிற்காக, தமிழர் உரிமைக்கான குழுமமானது பல தலைமுறைகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களையும், தாயகத்தில் சமூக அமைப்புகளுடனும் புலத்தில் சமூக உரிமைச் செயற்பாட்டாளர்களுடனுமான வலுவான தொடர்புகளையும், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் எழுபதுகளிலிருந்து தொடர்புபட்டிருந்த தலைமைகளையும் ஒருங்கிணைத்துள்ளது.
More information : https://www.tamilrightsgroup.org/