NationNews

தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத Jaffna Library யாழ் பொது நூலக எரிப்பு- 43 ஆண்டு

இலங்கையின் தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றுதான் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொதுநூலக எரிக்கப்பட்ட நிகழ்வு இன்றுடன் 43 வருடங்கள் ஆகின்றன

தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றாகும் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொதுசன நூலகத்தை சிங்கள பேரினவாதிகள் எரித்தது.

இந்த நூலகம் உலகில் எங்கும் காணக்கிடைக்காத பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள், நூல்கள் மற்றும் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளின் மூலப் பிரதிகளை தன்னகத்தே கொண்டிருந்தது. 1981 ஜூன் 4ஆம் திகதியன்று இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்ட போது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர்.

1981 மே 31ஆம் திகதியன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்து கொண்டிருந்த போது மர்ம நபர்களால்(இதுவரை கண்டுபிடிக்கப்படாத) அங்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. இதனால் வெடித்த வன்முறையில் யாழ்ப்பாணத்தின் பல வணிக நிறுவனங்கள், கடைகள், பத்திரிகை அலுவலகங்கள் ஆகியவை கொளுத்தப்பட்டன.

அதே நேரத்தில், பல வரலாற்றுப் பொக்கிஷங்களின் இருப்பிடமான யாழ்ப்பாண நூலகத்தையும் சிங்களப் பேரினவாத கும்பல் எரித்துச் சாம்பலாக்கியது. இந்த பண்பாட்டு அழிப்பு இன்று 43 ஆண்டு நிறைவை எட்டுகிறது.

1930களில், கே.எம். செல்லப்பா தனது சேகரிப்பில் இருந்த நூல்கள் மற்றும் பத்திரிகைகளை கொண்டு 1933ஆம் ஆண்டில் தனது வீட்டிலேயே வாடகை நூலகம் தொடங்கினார்.

சிலரின் ஆலோசனையின் பேரில், 1934 ஓகஸ்ட் 1ஆம் திகதியன்று யாழ்ப்பாண பொது மருத்துவமனை வீதியில் வாடகை அறையொன்றை ஏற்பாடு செய்து, 844 நூல்கள், 36 பருவ வெளியீடுகளுடன் யாழ்ப்பாண பொது நூலகம் தொடங்கப்பட்டது. இட நெருக்கடியின் காரணமாக, 1936ஆம் ஆண்டில் நகர மண்டபத்துக்கு நூலகம் மாற்றப்பட்டது.

தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திகழ்ந்த இந்த நூலக எரிப்பு, தமிழர்களின் மனநிலையை மாற்றிய முக்கிய வரலாற்று நிகழ்வாக அமைந்தது.

Public Library, Jaffna
Wike File:Public Library, Jaffna.JPG
Created: 4 February 2012
Uploaded: 7 February 2012

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!