ஒன்ராறியோ பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் (Bill 104) சட்டம் கனடிய அரசியல் சாசனத்தை மீறும் செயல் எனவும் அதனால் கனடா வாழ் சிங்கள மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன எனவும் பிரம்டனைத் தளமாகக் கொண்ட சிறிலங்கா கனடா அசோசியேசன் என்ன்னும் அமைப்பின் சார்பில் சேனா முனசிங்கா என்பவரினால் ஒன்ராறியோ அரசாங்கத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அந் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
Bill 104 என்ற பெயரில் சட்டமூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுப் பின்னர் ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினர்களினால் வாக்களித்து நிறைவேற்றப்பட்ட ‘தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம் 2021’ கனடிய அரசியலமைப்பை மீறவில்லை என இன்று (ஜூன் 28) ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ் வழக்கு ஒன்ராறியோ அரசாங்கத்துக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்தும் இவ்வழக்கை அரசாங்கத்தின் சார்பில் முற்று முழுதாக எதிர்கொண்டது தமிழ் உரிமைக் குழு என்ற அமைப்ப்பு. அதன் சார்பில் ஜனனி சண்முகநாதன் என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.
தமிழ் உரிமைக் குழு (Tamil Rights Group) வுக்கு அனுசரணையாக கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT), கனடிய தமிழ் அக்கடெமி (Canadian Tamil Academy) மற்றும் கனடிய தமிழ் இளையோர் அமைப்பு (Canadian Tamil Youth Alliance) ஆகியனவும் பணியாற்றியிருந்தன. (TNS)