NationNews

தமிழீத் தேசியக் கொடி நாள் நவம்பர் 21

தமிழீத் தேசியக் கொடி நாள் நவம்பர் 21, 2022 கனடா. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கனடாவில் இன்று நடை பெற்றது. Markham Rd & Mcnicoll Av சந்திப்பில் உள்ள தமிழர் வணிக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளை அரசியல் விவகார அமைச்சின் ஒருங்கிணைப்பாளர் வழிநடத்த, கனடாவின் மூத்த தேசிய செயற்பாட்டாளரும் , ஈழமுரசு பத்திரிகையின் நிர்வாகியுமான கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார் .

தமிழீழ தேசியக் கொடியினை நாடுகடந்ந அரசாங்கத்தின் தாயகத் தொடர்பு அமைச்சர் விஜிதரன் அர்களால் ஏற்றிவைக்கப்படது. இதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசிய மாவீரர் வார நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூத்த செயற் பாட்டாளர் வைசிகம்பதி யோகேந்திரன் அவர்கள் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அகவணக்கம் செலுத்தப்பட்டு அதணைத் தொடர்ந்து மலர்வணக்கம் நடைபெற்றது பின்னர் தமிழீழத் தேசியக்கொடி நாள் , மாவீர்களின் தியாகம் பற்றிய பேச்சுக்கள் நடைபெற்று நிகழ்வு உறுதிமொழியுடன் சிறப்பாக நடந்தேறியது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!