தமிழீழமே தமிழர்களுக்கான முடிவு- Mayor of Brampton Patrick Brown
பிறம்டன் நகர முதல்வர் தமிழர்கள் சார்பாக இலங்கை தூதுவரிடம் 2 முக்கிய கோரிக்கை

பிறம்டன் நகர முதல்வர் பற்றிக் பிறவுண்(Patrick Brown Mayor of Brampton) சமீபத்தில் இலங்கை தூதுவராலய அதிகாரி துஷார ரறொட்றிகோவைச் சந்தித்துப் பேசியிருந்தார். இதன் போது ஈழத் தமிழர்கள் சார்பாக அவர் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
1) சுதந்திரமான இறமையுள்ள தமிழீழமே இனங்களுக்கிடையேயான நீண்டகால நல்லிணக்கத்தைப் பேண வழிவகுக்கும்
2)தமிழினப் படுகொலையின் சூத்திரதாரியான மஹிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும். இலங்கை அவருக்குத் தொடர்ந்து பாதுகாப்பளித்து வருவதென்பது அது இதயசுத்தியோடு நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது
