Articlesகட்டுரைகணினித்தமிழ்

தமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு

தமிழ் இலக்கணம் கற்றல்கற்பித்தலில் கணினியின் பங்கு களஆய்வு

இரா. அருணா,

முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி,

கோபிசெட்டிபாளையம்.

ஆய்வின் பொருண்மை

மாணவர்களின் மனநிலைக்கேற்ப கற்றல்-கற்பித்தல் நடப்பது மிகவும் சிறந்தது ஆகும். அதன்படி தமிழ் இலக்கணத்தை எளிய முறையில் கணினி வழியாக மிக எளிமையாக கற்பிக்க விழைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே களப்பணி மேற்கொள்ளப்பட்டதே இவ்வாய்வின் நோக்கம் ஆகும்.

ஆய்வின் குறிப்புச்சொற்கள்

  • மாணவர்கள்
  • கணினி
  • கற்றல்
  • களப்பணி
  • ஆசிரியர்
  • தமிழ் இலக்கணம்
  • கல்வி
  • கல்லூரி
  • இணையம்
  • பாடத்திட்டம்
  • பள்ளி
  • பொதுத்தேர்வு

ஆய்வின் நோக்கம்

ஆய்விற்கான மாணவர்களின் கல்வித்தரத்தில் கணினியின் பங்கு பற்றி அறிய விழைந்து, அதற்கான களப்பணி ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி களப்பணிக்கான கேள்விகளை தயார் செய்யப்பட்டது. மேலும் களப்பணி நடத்தப்பட வேண்டிய மாணவர்களை தேர்வு செய்ய விழைந்து, அதற்காக பள்ளியில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளைத் தேர்ந்தெடுக்கப்பட்டு களப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் கல்லூரியில் தமிழ்மொழியை முதல் பாடமாக பயிலுபவர்கள், இரண்டாம் பாடமாக பயிலுபவர்களின் துறைகளை தேர்வு செய்து களப்பணியை மேற்கொள்ளப்படுவதே இவ்வாய்வின் நோக்கம் ஆகும். இதனைப்பற்றி விரிவாக இனி கீழே காண்போம்.

  • மாணவர்களின் இலக்கணத்தின் மீது உள்ள ஆர்வத்தை அறிதல்,
  • மாணவர்களின் கணினி பயன்பாடு பற்றி அறிதல்,
  • கணினியைப் பயன்படுத்தி இணையம் வழியாக கற்றலில் ஆர்வத்தை அறிதல்,
  • புத்தகத்தைத் தவிர கணினியில் கல்வி பயில்வதில் உள்ள ஆர்வத்தை அறிதல்,
  • மாணவர்கள் கணினியைப் பயன்படுத்தி இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் உள்ள ஈடுபாட்டை அறிதல்,
  • எளிய முறையில் இலக்கணத்தை கணினி வழி கற்றல்-கற்பித்தலில் தேர்வு எழுதும் ஆர்வத்தை அறிதல். இவைகளே இக்களப்பணியின் நோக்கம் ஆகும்.

களப்பணிக்கான களத்தைத் தேர்வு செய்தல்

மாணவர்கள் பாடப்புத்தகத்தை மட்டும் பயன்படுத்தி கல்வி கற்க விரும்புகிறார்களா? அல்லது கணினியின் துணை கொண்டு வகுப்பறை அல்லாத கல்வி கற்க விரும்புகிறார்களா? என்று ஆராய்வதற்காக களம் இறங்க தயாரானபோது மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்க விழைந்து அவர்களை ஆய்வுக்காக தேர்ந்தெடுத்து அவர்களிடம் கேள்விகள் வழங்கி பதில்கள் சேகரிக்கப்பட்டது.

பள்ளியில் களப்பணிக்கான வினாக்கள் உருவாக்கிய முறை

பொதுத்தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்கள் தமிழ் இலக்கணத்தில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இக்களப்பணி தொடங்கப்பட்டது. மேலும் மாணவர்களின் இன்றையத் தேவை மற்றும் பாடத்திட்டத்தின் வடிவமைப்புக்கு ஏற்றவாறு தமிழ் இலக்கணத்தை மிக எளிமையாகக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் களப்பணிக்கான வினாக்கள் உருவாக்கப்பட்டது. அவ்வினாக்களுக்கான விடைகளை மாணவர்கள் மிக ஆர்வமாக பதிலளித்துள்ளதை இனி நாம் கீழே காண்போம்.

12 – ஆம் வகுப்பு ஆம்இல்லை 
1. தமிழ் இலக்கணத்தை அறிந்துகொள்ள நீங்கள்
ஆர்வமாக உள்ளீர்களா? 
643
2. இலக்கணப் புத்தகத்தில் உள்ள தகவல்கள் மட்டும்
 நீங்கள் தேர்வில் வெற்றி பெற உதவுகிறதா?
3037
3. இணையத்தின் வாயிலாக தமிழ் இலக்கணத்தைத்
தேடுகிறீர்களா?      
2146
4. இணையத்தில் தமிழ் இலக்கணத் தகவல்கள் கிடைக்கிறதா?5610
5. இணையத்தின் வாயிலாகப் பெறப்படும் தமிழ்
இலக்கணத் தகவல்கள் தேர்விற்கு உதவுகிறதா?
5710
6. அதிகமான தகவல்கள் இணையத்திலிருந்து
பெற விரும்புகிறீர்களா?
5116
7. தமிழ் இலக்கணம் சார்ந்த காணொளிப் பதிவுகளை(வீடியோ) இணையத்தில் பார்த்துள்ளீர்களா?2047
8. தமிழ் இலக்கணம் சார்ந்த காணொளி(வீடியோ) பதிவுகள் நீங்கள் இலக்கணம் கற்க பயனுடையதாக உள்ளதா ? 3235
9. இலக்கணம் சார்ந்த தேர்வுகளை (1மதிப்பெண்) இணையதளத்தின் மூலமாக எழுத விருப்பம் உண்டா?4027
10. இலக்கணத் தேர்வினை கணினி வழியாக பயிலுவதால்
 தங்களுக்கு ஏதேனும் நன்மை உண்டா? 
598
11 – ஆம் வகுப்பு ஆம்இல்லை 
1. தமிழ் இலக்கணத்தை அறிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா? 684
2. இலக்கணப் புத்தகத்தில் உள்ள தகவல்கள் மட்டும்
நீங்கள் தேர்வில் வெற்றி பெற உதவுகிறதா ?
3735
3. இணையத்தின் வாயிலாக தமிழ் இலக்கணத்தைத் தேடுகிறீர்களா?      3834
4. இணையத்தில் தமிழ் இலக்கணத் தகவல்கள் கிடைக்கிறதா?648
5. இணையத்தின் வாயிலாகப் பெறப்படும் தமிழ் இலக்கணத்
தகவல்கள் தேர்விற்கு உதவுகிறதா?
6210
6. அதிகமான தகவல்கள் இணையத்திலிருந்து பெற விரும்புகிறீர்களா?648
7. தமிழ் இலக்கணம் சார்ந்த காணொளிப் பதிவுகளை(வீடியோ) இணையத்தில் பார்த்துள்ளீர்களா?4230
8. தமிழ் இலக்கணம் சார்ந்த காணொளி(வீடியோ) பதிவுகள் நீங்கள் இலக்கணம் கற்க பயனுடையதாக உள்ளதா ? 6111
9. இலக்கணம் சார்ந்த தேர்வுகளை (1மதிப்பெண்) இணையதளத்தின் மூலமாக எழுத விருப்பம் உண்டா?5121
10. இலக்கணத் தேர்வினை கணினி வழியாக பயிலுவதால்
தங்களுக்கு ஏதேனும் நன்மை உண்டா ? 
666
10 – ஆம் வகுப்புஆம்இல்லை 
1. தமிழ் இலக்கணத்தை அறிந்துகொள்ள  நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா? 501
2. இலக்கணப் புத்தகத்தில் உள்ள தகவல்கள் மட்டும் நீங்கள் தேர்வில்
வெற்றி பெற உதவுகிறதா ?
1041
3. இணையத்தின் வாயிலாக தமிழ் இலக்கணத்தைத் தேடுகிறீர்களா?      3714
4. இணையத்தில் தமிழ் இலக்கணத் தகவல்கள் கிடைக்கிறதா?3417
5. இணையத்தின் வாயிலாகப் பெறப்படும் தமிழ் இலக்கணத்
 தகவல்கள் தேர்விற்கு உதவுகிறதா?
3615
6. அதிகமான தகவல்கள் இணையத்திலிருந்து பெற விரும்புகிறீர்களா?483
7. தமிழ் இலக்கணம் சார்ந்த காணொளிப் பதிவுகளை(வீடியோ) இணையத்தில் பார்த்துள்ளீர்களா?3813
8. தமிழ் இலக்கணம் சார்ந்த காணொளி(வீடியோ) பதிவுகள் நீங்கள் இலக்கணம் கற்க பயனுடையதாக உள்ளதா ? 3813
9. இலக்கணம் சார்ந்த தேர்வுகளை (1மதிப்பெண்) இணையதளத்தின் மூலமாக எழுத விருப்பம் உண்டா?2724
10. இலக்கணத் தேர்வினை கணினி வழியாக பயிலுவதால் தங்களுக்கு
 ஏதேனும் நன்மை உண்டா? 
492
9 – ஆம் வகுப்பு ஆம்இல்லை 
1. தமிழ் இலக்கணத்தை அறிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா? 380
2. இலக்கணப் புத்தகத்தில் உள்ள தகவல்கள் மட்டும் நீங்கள்
தேர்வில் வெற்றி பெற உதவுகிறதா ?
137
3. இணையத்தின் வாயிலாக தமிழ் இலக்கணத்தைத் தேடுகிறீர்களா?      434
4. இணையத்தில் தமிழ் இலக்கணத் தகவல்கள் கிடைக்கிறதா?371
5. இணையத்தின் வாயிலாகப் பெறப்படும் தமிழ் இலக்கணத்
 தகவல்கள் தேர்விற்கு உதவுகிறதா?
2018
6. அதிகமான தகவல்கள் இணையத்திலிருந்து பெற விரும்புகிறீர்களா?308
7. தமிழ் இலக்கணம் சார்ந்த காணொளிப் பதிவுகளை(வீடியோ) இணையத்தில் பார்த்துள்ளீர்களா?335
8. தமிழ் இலக்கணம் சார்ந்த காணொளி(வீடியோ) பதிவுகள் நீங்கள் இலக்கணம் கற்க பயனுடையதாக உள்ளதா ?   371
9. இலக்கணம் சார்ந்த தேர்வுகளை (1மதிப்பெண்) இணையதளத்தின் மூலமாக எழுத விருப்பம் உண்டா?2810
10. இலக்கணத் தேர்வினை கணினி வழியாக பயிலுவதால்
தங்களுக்கு ஏதேனும் நன்மை உண்டா ? 
2612

பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் இறுதி முடிவு

10. இலக்கணத் தேர்வினை கணினி வழியாக பயிலுவதால்  தங்களுக்கு ஏதேனும் நன்மை உண்டா ? ஆம்இல்லை
20228
 

மாணவர்கள் இலக்கணத் தேர்வினை கணினி வழியாக பயிலுவதால் தங்களுக்கு ஏதேனும் நன்மை உண்டா? என்று இறுதியான கேள்விக்கு ஆம் என்று 202 மாணவர்கள் நேர்மறையான பதில் அளித்துள்ளனர்.

கல்லூரி மாணவர்களுக்கான களஆய்விற்கான வினாக்கள் உருவாக்கிய முறை

தமிழ்மொழியை முதல் பாடமாக பயிலுபவர்களும், இரண்டாம் பாடமாக பயிலுபவர்களும் தமிழ் இலக்கணத்தை கணினியின் வழியாக கற்க விரும்புகிறார்களா? என்றும் அவர்களின் இலக்கணப்பாடத்தை எளிமைப்படுத்தி கற்க விரும்புகிறார்களா? என்பதை அறிவதற்கு ஏற்ற வினாக்கள் அமைக்கப்பட்டது. இக்களஆய்வின் முடிவுகளை இனி கீழே காண்போம்.

இளங்கலை தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு ஆம்இல்லை
1. நீங்கள் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவரா? 423
2. இலக்கணம் உங்களுக்கு பிடிக்குமா?414
3. தங்களின் கல்வி சார்ந்த தேடுதலுக்கு
கணினியைப் பயன்படுத்துகிறீர்களா?
3114
4. கணினியின் வழியாக இணையத்தைப்
பயன்படுத்துகிறீர்களா?       
2916
5. இணையத்தின் வாயிலாக தமிழ் சார்;ந்த
 தகவல்களைத் தேடியுள்ளீர்களா?
3510
6. கணினியின் வழியாக இணையத்தில் இலக்கணம்
சார்ந்த தகவல்களை தேடியுள்ளீர்களா?
2223
7. இலக்கணம் சார்ந்த தகவல்கள் இணையத்தில்
உள்ளவை பயனுடையதாக உள்ளதா?
405
8. இணையத்தில் தமிழ் இலக்கணம் சார்ந்த
தகவல்கள் தேடிடுவதில் சிக்கல்கள் உள்ளதா?
2421
9. உங்களின் பாடத்திட்டத்தைத் தாண்டி இணையத்தில்
 பிற கருத்துகள் பயனுடையதாக உள்ளதா?
414
10. தமிழ் இலக்கணத்தை இணையத்தின் மூலமாகக்
 கற்பது எளிமையாக உள்ளதா?
3114
இலக்கியம் தமிழ் இரண்டாண்டு இளங்கலை ஆம்இல்லை 
1. நீங்கள் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவரா? 391
2. இலக்கணம் உங்களுக்கு பிடிக்குமா?2812
3. தங்களின் கல்வி சார்ந்த தேடுதலுக்கு
 கணினியைப் பயன்படுத்துகிறீர்களா?
355
4. கணினியின் வழியாக இணையத்தைப்
பயன்படுத்துகிறீர்களா?       
3010
5. இணையத்தின் வாயிலாக தமிழ் சார்;ந்த
 தகவல்களைத் தேடியுள்ளீர்களா?
373
6. கணினியின் வழியாக இணையத்தில் இலக்கணம்
 சார்ந்த தகவல்களை தேடியுள்ளீர்களா?
2812
7. இலக்கணம் சார்ந்த தகவல்கள் இணையத்தில்
 உள்ளவை பயனுடையதாக உள்ளதா?
328
8. இணையத்தில் தமிழ் இலக்கணம் சார்ந்த
தகவல்கள் தேடிடுவதில் சிக்கல்கள் உள்ளதா?
1723
9. உங்களின் பாடத்திட்டத்தைத் தாண்டி இணையத்தில்
 பிற கருத்துகள் பயனுடையதாக உள்ளதா?
382
10. தமிழ் இலக்கணத்தை இணையத்தின் மூலமாகக்
 கற்பது எளிமையாக உள்ளதா?
1624
இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாமாண்டு ஆம்இல்லை 
1. நீங்கள் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவரா? 331
2. இலக்கணம் உங்களுக்கு பிடிக்குமா?322
3. தங்களின் கல்வி சார்ந்த தேடுதலுக்கு கணினியைப்
பயன்படுத்துகிறீர்களா?
322
4. கணினியின் வழியாக இணையத்தைப்
பயன்படுத்துகிறீர்களா?       
295
5. இணையத்தின் வாயிலாக தமிழ் சார்ந்த
 தகவல்களைத் தேடியுள்ளீர்களா?
331
6. கணினியின் வழியாக இணையத்தில் இலக்கணம்
சார்ந்த தகவல்களை தேடியுள்ளீர்களா?
286
7. இலக்கணம் சார்ந்த தகவல்கள் இணையத்தில்
உள்ளவை பயனுடையதாக உள்ளதா?
322
8. இணையத்தில் தமிழ் இலக்கணம் சார்ந்த தகவல்கள்
 தேடிடுவதில் சிக்கல்கள் உள்ளதா?
1420
9. உங்களின் பாடத்திட்டத்தைத் தாண்டி இணையத்தில்
பிற கருத்துகள் பயனுடையதாக உள்ளதா?
331
10. தமிழ் இலக்கணத்தை இணையத்தின் மூலமாகக்
கற்பது எளிமையாக உள்ளதா?
1519
முதுகலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு ஆம்இல்லை
1. நீங்கள் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவரா? 71
2. இலக்கணம் உங்களுக்கு பிடிக்குமா?80
3. தங்களின் கல்வி சார்ந்த தேடுதலுக்கு
கணினியைப் பயன்படுத்துகிறீர்களா?
71
4. கணினியின் வழியாக இணையத்தைப்
 பயன்படுத்துகிறீர்களா?       
80
5. இணையத்தின் வாயிலாக தமிழ் சார்;ந்த
 தகவல்களைத் தேடியுள்ளீர்களா?
80
6. கணினியின் வழியாக இணையத்தில் இலக்கணம்
 சார்ந்த தகவல்களை தேடியுள்ளீர்களா?
44
7. இலக்கணம் சார்ந்த தகவல்கள் இணையத்தில்
உள்ளவை பயனுடையதாக உள்ளதா?
71
8. இணையத்தில் தமிழ் இலக்கணம் சார்ந்த
தகவல்கள் தேடிடுவதில் சிக்கல்கள் உள்ளதா?
62
9. உங்களின் பாடத்திட்டத்தைத் தாண்டி இணையத்தில்
பிற கருத்துகள் பயனுடையதாக உள்ளதா?
71
10. தமிழ் இலக்கணத்தை இணையத்தின்
மூலமாகக் கற்பது எளிமையாக உள்ளதா?
08
இயற்பியல் இளங்கலை முதலாமாண்டுஆம்இல்லை 
1. நீங்கள் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவரா? 2215
2. இலக்கணம் உங்களுக்கு பிடிக்குமா?307
3. தங்களின் கல்வி சார்ந்த தேடுதலுக்கு
கணினியைப் பயன்படுத்துகிறீர்களா?
2512
4. கணினியின் வழியாக இணையத்தைப் பயன்படுத்துகிறீர்களா?       2512
5. இணையத்தின் வாயிலாக தமிழ் சார்ந்த
 தகவல்களைத் தேடியுள்ளீர்களா?
2611
6. கணினியின் வழியாக இணையத்தில் இலக்கணம்
சார்ந்த தகவல்களை தேடியுள்ளீர்களா?
1621
7. இலக்கணம் சார்ந்த தகவல்கள் இணையத்தில்
உள்ளவை பயனுடையதாக உள்ளதா?
2512
8. இணையத்தில் தமிழ் இலக்கணம் சார்ந்த தகவல்கள்
தேடிடுவதில் சிக்கல்கள் உள்ளதா?
928
9. உங்களின் பாடத்திட்டத்தைத் தாண்டி இணையத்தில்
 பிற கருத்துகள் பயனுடையதாக உள்ளதா?
298
10. தமிழ் இலக்கணத்தை இணையத்தின் மூலமாகக்
கற்பது எளிமையாக உள்ளதா?
1720
இயற்பியல் இளங்கலை இரண்டாமாண்டு ஆம்இல்லை 
1. நீங்கள் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவரா? 3412
2. இலக்கணம் உங்களுக்கு பிடிக்குமா?3313
3. தங்களின் கல்வி சார்ந்த தேடுதலுக்கு
கணினியைப் பயன்படுத்துகிறீர்களா?
388
4. கணினியின் வழியாக இணையத்தைப்
பயன்படுத்துகிறீர்களா?       
3610
5. இணையத்தின் வாயிலாக தமிழ் சார்ந்த
தகவல்களைத் தேடியுள்ளீர்களா?
3016
6. கணினியின் வழியாக இணையத்தில் இலக்கணம்
 சார்ந்த தகவல்களை தேடியுள்ளீர்களா?
1234
7. இலக்கணம் சார்ந்த தகவல்கள் இணையத்தில்
உள்ளவை பயனுடையதாக உள்ளதா?
3016
8. இணையத்தில் தமிழ் இலக்கணம் சார்ந்த தகவல்கள்
தேடிடுவதில் சிக்கல்கள் உள்ளதா?
2125
9. உங்களின் பாடத்திட்டத்தைத் தாண்டி இணையத்தில்
 பிற கருத்துகள் பயனுடையதாக உள்ளதா?
424
10. தமிழ் இலக்கணத்தை இணையத்தின் மூலமாகக்
கற்பது எளிமையாக உள்ளதா?
2521

கல்லூரியில் நடத்தப்பட்ட களஆய்வின் இறுதி முடிவு

10. தமிழ் இலக்கணத்தை இணையத்தின்
மூலமாகக் கற்பது எளிமையாக உள்ளதா?
ஆம்இல்லை
10487

கல்லூரிமாணவர்கள் தமிழ் இலக்கணத்தை இணையத்தின் மூலமாகக் கற்பது எளிமையாக உள்ளது என்று 104 மாணவர்கள் நேர்மறையான பதில் அளித்துள்ளார்கள்.

களஆய்வின் முடிவு

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட களஆய்வின் அடிப்படையில் தமிழ் இலக்கணத்தை கணினி வழியாக எளிய முறையில் கற்க ஆர்வமாக உள்ளதை இறுதி முடிவாக அறிய முடிகிறது.

கள ஆய்விற்கான இடங்கள்

பள்ளிநகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையம்,

நாள்    –  04.01.2019          

கல்லூரிபி.கே.ஆர் மகளிர் கலைக்கல்லூரி, கோபிசெட்டிபாளையம்.

நாள்        – 20.12.2018       

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!