NationNews

தியாக தீபம் திலீபனின் 35வது வருட நினைவு நாள்

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள். தமிழர் தாயகத்திலும் , புலம்பெயர்ந்த தமிழர் நாடுகளிலும் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று(26) காலை 9.00 மணிக்கு திலீபனின் நினைவு படத்திறகு சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி நடைபெற்றது

திலீபன் (Thileepan) எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (29 நவம்பர் 1963 – 26 செப்டம்பர் 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால மற்றும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர்.இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்த இவர் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அறப் போராட்டத்தின் வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சமயத்திலும், உறுதியுடன் அந்த உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்

#தியாகதீபம்_திலீபன் @ photo

தியாகதீபம் திலீபனின் 35ம் ஆண்டு நினைவு ,கனடா. ஸ்காபரோவில் எழுச்சிகரமாக நினைவு கூரப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் 35வது வருட நினைவு நாள்-உணவுகொடை

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!