திருச்சி சிறப்பு முகாமிலிருந்து பத்து ஈழத்தமிழர்கள் விடுதலை

நாங்கள் தொடர்ந்து எடுத்த பெருமுயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று பத்து ஈழத்தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்கு செல்கிறார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் இவர்கள் சம்மந்தமான காவல்துறை அதிகாரிகளுக்கும் திருச்சி மாவட்ட ஆட்சியர், மறுவாழ்வுத்துறை ஆணையர் மற்றும் அகதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஐயா மஸ்தான் அவர்களுக்கும் நெகிழ்ந்த நன்றிகள்.

இதேபோன்று மீதமுள்ள தமிழீழத் தமிழர்கள் அனைவரையும் விரைவில் விடுதலை செய்து அவர்களின் குடும்பத்தினரோடு சேர்ப்பிக்க வேண்டுமென மீண்டும் வேண்டுகோள் வைக்கிறேன்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
15.07.2021

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!