துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழந்தார்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழப்பு
ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் நவீன ஜப்பானின் முக்கிய பிரதமராக ஆக கருதப்படுகிறார். வயிற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 67 வயதாகும் ஷின் சோ அபே, மருத்துவரின் அறிவுறுத்தல் படி கடந்த 2020ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து இருந்தார்
துப்பாக்கிச்சூட்டில் மிக மோசமாகக் காயம் அடைந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உயிருக்கு போராடிய நிலையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை காக்க மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் ஜப்பான் பிரதமர் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா குறிப்பிட்டார். இந்தச் சூழலில் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.
கனடிய பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்
