நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் கொரோனா
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்-அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்
கமல்ஹாசன் (Kamal Haasan, பிறப்பு:07 நவம்பர் 1954) ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்
கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவருக்கு பதில் இனி யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.