பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, அடையாளம் காணப்பட்டுள்ள தேவைகளை ஈடு செய்யப் பூர்வகுடிச் சமூகங்களுக்கும்
உடனடி வெளியீட்டுக்காக
மே 29, 2020
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை
பூர்வகுடியினர், குறிப்பாக எளிதில் சென்றடைய முடியாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்போர், ஏற்கனவே எதிர்கொண்ட பல சவால்கள் கோவிட்-19 காரணமாக மேலும் அதிகமாக வெளித்தெரிகின்றன. கனேடிய அரசு, முதற் தேசம் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி (Métis) ஆகிய சமூகங்களுடன் இணைந்து, அவற்றின் உடனடிப் பொதுச் சுகாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறது. அவர்களது குறிப்பான தேவைகளை அந்தச் சமூகங்கள் தலைமையிலான நடவடிக்கைகள் மூலம் நிவர்த்தி செய்யும் அதேவேளை, நீண்டகால அடிப்படையிலான ஆதரவை வழங்குவதற்கான சந்தர்ப்பங்களும் அடையாளம் காணப்படுகின்றன.
பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, அடையாளம் காணப்பட்டுள்ள தேவைகளை ஈடு செய்யப் பூர்வகுடிச் சமூகங்களுக்கும், குடும்பங்களுக்கும் ஆதரவை வழங்குவதற்குப் புதிய நிதி உதவியை இன்று அறிவித்தார். இதில் பின்வருவனவும் அடங்குகின்றன:
• பூர்வகுடிச் சமூகங்களில் இடம்பெறும் கோவிட்-19 இற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவியாக 258.1 மில்லியன் டொலர் வழங்கப்படும். உலகத் தொற்றுநோய்க்கு எதிரான சமூகம் தலைமையிலான பதில் நடவடிக்கைக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படுவதுடன், முதற் தேச சமூகங்களில் ஆரம்ப சுகாதார வளங்களை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.
• பூர்வகுடி நிலங்களில் வசிப்போருக்கான வருமான ஆதரவுத் திட்டத்தின் (On-Reserve Income Assistance Program) தேவை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு 270 மில்லியன் டொலர் மேலதிகமாக வழங்கப்படும். தனிநபர்களும் குடும்பங்களும் அவர்களது அத்தியாவசிய வாழ்க்கைச் செலவினங்களை நிறைவு செய்ய இது உதவியாயிருக்கும்.
• வன்முறையை எதிர்கொள்ளும் மற்றும் அதிலிருந்து தப்பியோடும் பூர்வகுடிப் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பும் ஆதரவும் வழங்குவதற்குப் புதிதாகப் 12 ஷெல்ட்டர்களை அமைப்பதற்கு ஐந்து வருட காலப் பகுதியில் 44.8 மில்லியன் டொலர் வழங்கப்படும். பூர்வகுடிப் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் உதவியாக நாடெங்கும் பூர்வகுடி நிலங்களில் உள்ள முதற் தேச சமூகங்களில் 10 ஷெல்ட்டர்களையும், பிராந்தியங்களில் இரண்டு
ஷெல்ட்டர்களையும் அமைப்பதற்கு இந்தப் பணம் பயன்படும். இந்தப் புதிய ஷெல்ட்டர்களின் செயற்படு செலவினத்திற்கு உதவியாக முதல் ஐந்து வருடங்களுக்கு 40.8 மில்லியன் டொலரையும், ஆண்டுதோறும் 10.2 மில்லியன் டொலரையும் அரசு வழங்கும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 305 மில்லியன் டொலர் பூர்வகுடிச் சமூகங்களுக்கான உதவி நிதியாலும் (Indigenous Community Support Fund), நகர்ப் புறங்களிலும், பூர்வகுடி நிலங்களுக்கு வெளியேயும் வசிக்கும் பூர்வகுடியினருக்கு ஆதரவளிக்கும்