பிரிட்டனில் சாகும் வரையான உணவு தவிர்ப்பு
அம்பிகை செல்வகுமார் அவர்கள் பிரித்தானியாவில் இலங்கை இனவாத அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக் கோரி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் (UNHRC) எமக்கான நீதி வேண்டி – UK யில் உண்ணாவிரதப் போராட்டம்”
திகதி : 27/02/2021 – நேரம் : 12 PMசாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை அம்பிகை செல்வகுமார் என்ற தமிழ்ப் பெண்மணி இன்று 27ந் திகதி மதியம் 12 மணிக்கு பிரித்தானியாவில் தமிழ் மக்களுடன் ஆரம்பிக்கின்றார்.ஜெனிவாவில் ஜ.நா மனித உரிமைப் பேரவையில் மீண்டும் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கி இலங்கையின் நீதியற்ற உள்ளூர் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்து போகச் செய்யும் அதேவேளை தற்போது தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை இலங்கை பேரினவாத அரசு தொடர்வதற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் இலங்கை குறித்து இணைத் தலைமை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன் வைக்கவுள்ள செய்தி உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும், மனித நேயத்தை நேசிக்கும் அனைவருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக தாயகத்தில் வீதிகளில் இறங்கி நீதிக்காக போராடிவரும் எமது தாய்மார்கள், குழந்தைகள், மற்றும் குடிசார் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எமது உறவுகள் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அம்பிகை, எமது தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனித நேயத்தோடு சாகும் வரையிலான இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை தான் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.கொரோண வைரஸ் காலத்தில் அனைத்து பிரச்சனைகளையும் மனதில் கொண்டு, அனைவருக்குமான பாதுகாப்புடன் எங்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்பதை அறியத்தருவதுடன், எங்கு, எந்த நெரம் மக்களும் வந்து தமது பங்களிப்பையும் செய்யலாம் என்பதும் அறியத்தரப்படும்.