NationNewsWorld

புகழ்பெற்ற இந்திய பிரபல திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 74 வயதில் காலமானார்

COVID-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் காலமானதாக அவரது மகன் SPB சரண் ஊடகங்களிடம் தெரிவித்தார்

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (ஜூன்4,1946 – செப்டம்பர் 25,2020) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி. (S.P.B.) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது.இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!