EntertainmentNationNews

புரட்சிக்கலைஞராக வலம் வந்த விஜயகாந்த் சென்னையில் மரணமானார்

கப்டன் என ரசிகர்களால் விரும்பப்பட்டவரும் தேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தே.தி,மு.க.) தலைவருமான விஜயகாந்த் கோவிட் தொற்று காரணமாக நேற்று சென்னையில் மரணமானார். இறக்கும்போது அவருக்கு 71 வயது.


Born: August 25, 1952, Madurai, India
Died: December 28, 2023, Chennai, India
Spouse: Premalatha Vijayakanth (m. 1990)
Party: Desiya Murpokku Dravida Kazhagam
Children: Shanmuga Pandian, Vijay Prabhakar Alagarswami

1979 இல் இனிக்கும் இளமை என்ற படத்தில் வில்லனாக அறிமுகமாகிய விஜயகாந் பின்னர் கதாநாயகன் வேடங்களில் பல படங்களில் நடித்திருந்தார். இதன் பின்னர் அவரது பல படங்கள் தோல்வியைத் தழுவினவெனினும் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட தூரத்து இடிமுழக்கம் படமே அவரைத் தூக்கிவிட்டது. கமல், ரஜினி ஆகியவர்களோடு சமகாலத்தில் அறிமுகமாகிய விஜயகாந்த் ஏனைய இருவரின் நிலைக்கு உயரமுடியாமல் போய்விட்டதென்றாலும் கொலிவூட்டில் அவர் சில சாதனைகளைப் படைத்திருக்கிறார். 1984 ஆம் ஆண்டு ‘ஒரே ஆண்டில் 18 படங்களைத் திரைகளுக்குக் கொண்டுவந்த அவரது சாதனையை இன்னும் எவரும் மீறவில்லை. அவரது வெற்றிப்படமான வைதேகி காத்திருந்தாள் இவ்வருடத்திலேயே தயாரைக்கப்பட்டது. தமிழில் முதலாவதாகத் தயாரிக்கப்பட்ட முப்பரிமாணப் படமான (3D) அன்னை பூமியும் ‘கப்டனுடையது’ தான்.

விஜயகாந்த்தின் திரை வாழ்வில் மிக முக்கியமான படம் கப்டன் பிரபாகரன். இதன் பின்னரே ‘கப்டன்’ என்ற பட்டம் அவரைத் தொற்றிக்கொண்டது. இது அவரது 100 ஆவது படம். சந்தனக்கட்டை வீரப்பனது வாழ்வை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் வீரபத்திரன் என்பவரைப் பிடிப்பதற்கு அலையும் வன இலாகா அதிகாரியாக விஜயகாந்த் நடித்திருந்தார்.

விஜயகாந் நடித்த புலன் விசாரணை தமிழ்த் திரையுலகில் இன்றுவரை பேசப்படும் சிறந்த ‘கிரைம் திறில்லர்’ படங்களில் ஒன்று. மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகிய சத்திரியன் மற்றும் சேதுபதி ஐ.பி.எஸ். ஆகியவை அவர் நடித்த சிறந்த ‘காக்கிச் சட்டைப்’ படங்களெனப் பெயர் பெற்றவை.

வயதும், மாறும் இரசிகர்களும் ஒத்துழைக்க மறுத்த பருவத்தில் அவர் மீது நளினங்கள் குவியத்தொடங்கின. அவரது கதை வசனங்கள் இளைய ரசிகர்களது நகைப்புக்கு உள்ளாகின. இக்காலத்தில் அவர் தனது பார்வையை அரசியல் மீது திருப்பினார். அதிலும் அவர் சிகரத்தைத் தொட முடியாமல் போகவே தனது மகனைத் திரையுலகுள் தள்ளிவிடுவதற்காக மீண்டும் கொலிவூட்டை நாடினார். ஆனால் அவருக்கும் ரசிகர்களுக்குமான இடைவெளி அப்போது மிகப் பெரியதாகி விட்டிருந்தது. ‘கப்டன்’ என்னும் பட்டம் அப்போது மிகவும் நையாண்டிக்குரிய ஒன்றாகிவிட்டிருந்தது.

ஏழைகளுக்கு உதவுவதில் இடது கைக்குத் தெரியாது வலது கையால் கொடுத்தவர். ஈழத்தமிழர் விடயத்தில் மிகவும் பசுமையான எண்ணங்களைக் கொண்டிருந்தவர். கமல், ரஜினி காலத்தில் திரைக்கு வந்தது அவரது பிறப்பின் குற்றம். இவர்களது நிழலில் அவரால் தழைக்க முடியவில்லை. ஆனாலும் நல்ல நடிகர்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!