நிகழ்வுகள்-Events

பெண்கள் ஆவணகம் தொடர்பிலான இணையவழிக் கலந்துரையாடல்

நூலக நிறுவனம், ஊடறு மற்றும் லண்டன் தமிழ் பெண்கள் ஒன்றியம் ஆகிய அமைப்புக்களின் அனுசரணையில் பெண்கள் ஆவணகம் தொடர்பிலான இணையவழிக் கலந்துரையாடல் 01.05.2021 மாலை 7.30 (இலங்கை நேரம்) செயலி ஊடாக இடம்பெறவுள்ளது.

கலந்துரையாடலில் மலையக உழைக்கும் பெண்களும் அவர்தம் வாழ்வியலை ஆவணப்படுத்தலில் முக்கியத்துவம் எனும் தலைப்பில் லுணுகலை ஸ்ரீ அவர்களும், குயர் அடையாளங்களும் தொழிலாளர் உரிமைகளும் எனும் தலைப்பில் தேன்மொழி மாக்ரட் அவர்களும், பெண்களின் சுயதொழில் பொருளாதாரம் எனும் தலைப்பில் பிஸ்லியா பூட்டோ அவர்களும், மலைய பெண்களும் அவர்கள் எதிர்நோக்கும் வன்முறைகளும் எனும் தலைப்பில் சரஸ்வதி சிவகுரு அவர்களும் உரையாற்றவுள்ளனர். நிகழ்வினை நூலக நிறுவன பிரதம செயற்பாட்டு அலுவலர் ரஞ்சுதமலர் நந்தகுமார் ஒருங்கிணைத்து நடாத்துவார்.

இணையவழி உரையாடலில் இணைய Zoom Meeting iD – 632 8830 7817 | Password – 26578410

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!