NationNews

மக்கள் கிளர்ச்சியின் எதிரொலியாக வங்கதேசத்தை விட்டு வெளியேறிய பிரதமர் எங்கே?

இலங்கையில் நடந்தது போல் மக்கள் கிளர்ச்சியின் எதிரொலியாக, வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா Prime Minister of Bangladesh, Ms. Sheikh Hasina லண்டனுக்கு புறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

PM in a bilateral meeting with the Prime Minister of Bangladesh, Ms. Sheikh Hasina, in New Delhi on September 08, 2023.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து இன்று (5ம் தேதி) மதியம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, புதுடெல்லி நோக்கி சென்றதாக தகவல் வெளியானது. மேலும், பிஏஐ செய்தி நிறுவனம், அவர்கள் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சாணக்யபுரியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கான பாதுகாப்பை டெல்லி காவல்துறை அதிகரித்துள்ளது. தூதரகத்துக்கு வெளியே அதிக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு பணியமர்த்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைப்பதற்கான முயற்சிகளை அந்நாட்டு ராணுவம் மேற்கொண்டு வரும் நிலையில், போராட்டம் நடத்தும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மாணவர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் நஹிட் இஸ்லாம், “ஹசீனாவின் ராஜினாமாவை மட்டும் நாங்கள் கோரவில்லை. மாறாக பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, வங்கதேசத்தில் ஜனநாயக அரசியல் சூழலை உருவாக்க வேண்டும். புதிய ஆட்சி அமைக்கப்படுவதற்கு முன்பாக, அது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். இல்லையெனில் மாணவர்கள் வீதிகளை விட்டு வெளியேற மாட்டார்கள்” என எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!