NationNews

மத்திய அரசாங்கம் கோவிட்-19 ( COVID -19) சார்பான உதவிகளை மேலும் நீடிக்க முன்மொழிகின்றது

ஏப்ரல் 19 ,2021

மத்திய அரசாங்கம் கோவிட்-19 ( COVID -19) சார்பான உதவிகளை மேலும் நீடிக்க முன்மொழிகின்றது

உதவிப் பிரதம மந்திரியும் ,நிதி அமைச்சருமான கெளரவ கிறிஸ்டியா ஃப்றீலாண்ட் ( Chrystia Freeland) அவர்கள் நேற்று 2021 ம் ஆண்டிற்குரிய வரவு செலவுத்திட்டத்தை வெளியிட்டார். கோவிட்-19 ( COVID -19) ற்கு எதிராகப் போட்டியிட்டு அதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து எல்லா கனேடியர்களையும் ஒரு வலுவான ,பலமான பொருளாதார மீட்சிக்குக் கொண்டு வருவதற்காக கனேடிய அரசாங்கமானது தொழில் ,வளர்ச்சி மற்றும் நெகிழ்திறன் ,எதிர்கொள்ளும் ஆற்றல் என்பவற்றில் ஒரு மீட்சித்திட்டமொன்றைக் கொண்டுள்ளது.

விகிதாசாரமற்றமுறையில் குறைந்த ஊதியம் பெறும் வேலையாட்கள் , இளவயதினர் ,பெண்கள் , இனரீதியான கனேடியர்கள் யாவரையும் COVID -19 ஆனது பாதித்துள்ளது. வணிகம் அல்லது வியாபரங்களைப் பொறுத்தவரை இரண்டு விதமான வேகத்தடங்களில் பயணிக்கும் மந்தநிலை காணப்படுகின்றது. சில எவ்வாறு செழித்து வளரலாம் எனப்பார்க்கின்றன ஆனால் பல வணிகங்கள் அதிலும் குறிப்பாக சிறு வியாபாரங்கள் தம்மைத் தக்கவைத்துக்கொள்ளப் போரடுகின்றன. 2021 ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டமானது கோவிட்-19 ( COVID -19 ) மந்தநிலையினால் ஏற்பட்ட குறிப்பிட்ட காயங்களைக் கருதி எடுக்கப்பட்ட ஒரு சரித்திர ரீதியான முதலீடு ஆகும். மக்களை முன்னிலைப்படுத்தி ,தொழில் உருவாக்கம் ,, நடுத்தர வர்க்கத்தினரின் வளர்ச்சி , வணிகங்களை ஒரு வழிக்குக் கொண்டு வந்து தூர நோக்கில் அதன் வளர்ச்சியையும் கருத்திலெடுத்து , கனடாவின் எதிர் காலமானது ஆரோக்கியமானதாகவும் , கூடியளவு சமத்துவமானதாகவும் ,பசுமையானதாகவும் ,வளமானதாகவும் இருப்பதனை உறுதி செய்வதாகும்.

2021 ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

· ஒரு மில்லியன் புதிய வேலை வய்ப்புக்களை இவ்வருட முடிவுக்குள் உருவாக்கும் திட்ட ஏற்பாடு.

· ஐந்து வருட கால அளவிடையில் $30 பில்லியன் தொகை வழங்கப்பட்டு ஒரு தேசிய அளவிலான குழந்தை பராமரிப்பு திட்டமொன்றை உருவாக்குதல் , அதனைத்தொடர்ந்து வரும் ஒவ்வொரு வருடங்களிற்கும் $8.3 பில்லியன் வழங்குதல். இந் நிகழ்ச்சித்திட்டமானது 2022 ம் ஆண்டளவில் சாராசரியாக 50 வீதமளவில் பராமரிப்புக்கட்டணத்தைக் ஒழுங்கு படுத்தப்பட்ட குழந்தை பராமரிப்பு நிலையங்களில் குறைப்பதற்கு வழிவகுக்கும் . இவ்வாறு கியுபெக் ( Quebec) தவிர்ந்த ஏனைய எல்லா இடங்களிற்கும் 2026 ம் ஆண்டளவில் ஒரு நாளிற்கு $10 டொலர் மட்டுமே பராமரிப்பிற்கு போதும் என்ற இலக்கை அடைவதாகும்.

· கோவிட்-19 ( COVID -19 ) ற்கான வியாபார மற்றும் வருமான ஆதரவு வழங்கும் நடைமுறைகளை ,உதாரணமாக ஊதியம் , வாடகை மானிய உதவி ஆகியவற்றினை புரட்டாதி 2021 வரை நீடித்தல்.

· தொழிற்காப்பீடு (EI) சுகயீன நலக்கொடுப்பனவிற்குரிய அதிகூடிய கால அளவினை 15 வாரத்திலிருந்து 26 வாரமாக அதிகரித்தல்.

· 2022 ம் ஆண்டு ஆடி மாதம் 1ந்திகதியிலிருந்து 75 வயதிற்கும் அதற்கு மேற்பட்டோருக்கும் பத்து (10) வீதம் அதி கூடிய தொகையாக OAS இனை அதிகரித்தல், அத்துடன் $500 டொலர் ஒரு புதிய மானியத்தொகையாக 75 வயதிற்கும் அதற்கு மேற்பட்டோருக்கும் OAS ஓய்வூதியத்தொகையாக 2022 லிருந்து ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும்.

· மூத்தோரின் நீண்டகால பராமரிப்பினை மேம்படுத்தவும் தரமான பராமரிப்பினை வழங்கவும் , ஐந்து வருட கால அளவிற்கு $3 பில்லியன் நிதியானது உதவித்தொகையாக மாகாணங்களிற்கும் பிரதேசங்களிற்கும் வழங்கப்படும்.

· ஒரு பசுமைப் பொருளதாரத்தை உந்தித் தோற்றுவிக்கும் மாறுநிலைக்காகவும் பழையநிலைக்கு மீண்டுவரவும் மூன்று வருட கால அளவிடையில் புதிய செலவினமாக $101.4 பில்லியன் செலவிடப்படும்.

· மத்திய அரசினால் ஒழுங்கு படுத்தப்பட்ட எல்லா வேலையாட்களுக்குரிய அதி குறைந்த வேதனமாக $15 டொலர் நிர்ணயிக்கப்படும். தற்போது குறிப்பிட்ட சில துறைகளில் இத்தொகையினை விடக்குறைவான ஊதியம் பெறும் 26.000 கனேடியர்கள் இதன் தாக்கத்திலிருந்து விடுபடுவர்.

· பங்குனி மாதம் 31ந்திகதி 2023 வரை கனடா மாணவர் கடன் , கனடா பயிற்சிக் கடன் ஆகியவற்றிற்கான வட்டி தள்ளுபடி செய்யப்படுகின்றது. இத்த்கைய மாற்றத்தினால் 2022-23 காலப்பகுதிக்கு $392.7 மில்லியன் தொகை தேவைப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது .இதன் மூலம் அண்ணளவாக 1,5 மில்லியன் கனேடியர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து காக்கப்படுகின்றனர்.

· தனித்து வாழும் ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆரம்ப அதிகூடிய வருமானமாக $40,000 டொலராக இருக்கவேண்டும் .$40,000 டொலர் அல்லது அதற்குக் குறைவான தொகையை வருட வருமானமாகப் பெறுபவர்கள் மாணவர் கடனைத் திருப்பிச் செலுத்தும் தேவை ஏற்படாது.

· குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு கோவிட்-19 ( COVID -19 ) காலப்பகுதியில் ஆதரவளிப்பதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கமானது கனடா மாணவர் மானியத்தினை நீடித்து ஆடி மாதம் 2023 வரை இரட்டிப்பாக்க உத்தேசித்துள்ளது.

· பாலியல் ரீதியான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஒரு தேசிய நடவடிக்கைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்து ,நிலைநிறுத்துவதற்காக $601 மில்லியன் டொலர் அடுத்து வரும் 4 வருடங்களிற்கு முதலீடு செய்யப்படும்.

· 2021 ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டமானது கனடாவின் உயிர்- உற்பத்தியிலும் ,வாழ்க்கை விஞ்ஞானத் துறையிலும் அதாவது உள்ளூரிலேயேதடுப்பூசிகளைத் தயாரிப்பதற்குரிய திறனை மீளக்கட்டமைக்கவும் வரவு செலவுத்திட்டமானது முதலீடு செய்யும்.

· 2021 ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் விபரங்களையும் மற்றைய முதலீடுகள் பற்றி பிரேரிக்கப்பட்டுள்ளதனையும் பார்ப்பதாயின் பின்வரும் இணையத்தளத்தில் பார்க்கலாம். www.Budget.gc.ca

Media Advisory:   2021 Federal Budget -Tamil

Media Advisory:– Office of  Gary Anandasangaree

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!