மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக -கனடா வெளியிட்ட அறிக்கை.
High Commissioner report on Sri Lanka (Cont’d) – 10th Meeting, 46th Regular Session Human Rights Council
மற்ற நாடுகளின் உரை – கனடிய உரை கீழே பார்க்கவும்
SPEAKERS
United Kingdom of Great Britain and Northern Ireland, Mr. Lord Ahmad
European Union, Ms. Ida Krogh Mikkelsen
Norway (on behalf of Nordic Countries), Ms. Tine Mørch Smith
Canada, Mr. Robert Oliphant
Germany, Mr. Hans-Peter Jugel
Russian Federation, Mr. Artur Chernyakov
France, Mr. François Gave
North Macedonia, Ms. Teuta Agai-Demjaha
Australia, Ms. Sally Mansfield
Philippines, Mr. Evan P. Garcia
Switzerland, Mr. Jürg Lauber
Venezuela (Bolivarian Republic of), Mr. Héctor Constant Rosales
Japan, Mr. Ken Okaniwa
Netherlands, Ms. Monique T.G. Van Daalen
India, Mr. Indra Mani Pandey
Marshall Islands, Mr. Samuel K. Jr. Lanwi
Democratic People’s Republic of Korea, Mr. Han Tae Song
Belgium, Mr. Marc Pecsteen de Buytswerve
Gabon, Ms. Nadège Moucketou Mvou
Pakistan, Mr. Tahir Andrabi
United States of America, Mr. Dan Kronenfeld
Iran (Islamic Republic of), Mr. Mehdi Ali Abadi
Cameroon, Mr. Côme Damien Georges Awoumou
China, Mr. Chen Xu
Belarus, Mr. Andrei Taranda
Maldives, Mr. Asim Ahmed
Montenegro, Ms. Slavica Milačić
Viet Nam, Mr. Le Quang Binh
Syrian Arab Republic, Ms. Mohamadia Alnasan
Cambodia, Mr. Va Veasna
Nepal, Mr. Mani Prasad Bhattarai
Egypt, Mr. Ahmed Ihab Gamaleldin
Ireland, Mr. Michael Gaffey
Azerbaijan, Mr. Emin Aslanov
Lao People’s Democratic Republic, Mr. Kittiphone Sayaphet
Nicaragua, Mr. Álvaro Fernando Murillo Centeno
Cuba, Mr. Jairo Rodriguez
Eritrea, Mr. Adem Osman Idris
International Movement Against All Forms of Discrimination and Racism (IMADR), Mr. Taisuke Komatsu
Amnesty International, Ms. Hilary Power
Human Rights Watch, Mr. John Fisher
Asian Forum for Human Rights and Development, Mr. Ahmed Adam
Lawyers’ Rights Watch Canada, Ms. Harini Sivalingam
International Commission of Jurists, Mr. Massimo Frigo
Commonwealth Human Rights Initiative, Ms. Aditi D. Patil
CIVICUS – World Alliance for Citizen Participation, Ms. Lisa Majumdar
Society for Threatened Peoples, Mr. Sahithyan Thilipkumar
Christian Solidarity Worldwide, Ms. Claire Denman
Ms. Nada Al-Nashif, Deputy High Commissioner for Human Rights (Final Remarks)
Remarks by Canada on the OHCHR report on Sri Lanka
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனடா வெளியிட்ட அறிக்கை
ஃபெப்ரவரி 25, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உயர் ஆணையாளர் சமர்ப்பித்த இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக வெளியுறவு அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் றொப் ஒலிஃபண்ட், (Rob Oliphant) பின்வரும் கருத்தை வெளியிட்டார்.
“உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையைக் கனடா வரவேற்கிறது.
30ஃ1 தீர்மானத்திற்கான ஆதரவை மீளப் பெறும் இலங்கை அரசின் முடிவு எமக்கு வருத்தமளிக்கிறது.
மீளிணக்கம், பொறுப்புக் கூறல் ஆகியவற்றுக்கான உள்நாட்டு நடைமுறைகள் தொடர்ந்தும் பயனளிக்கத் தவறிவருகின்றன. தப்பிப்பிழைத்தோர், உண்மையைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் உறுதியாக இருப்பதுடன், அசாத்தியமான ஆபத்துக்களின் மத்தியிலும் சான்றுகளை வழங்க முன்வந்துள்ளார்கள். அவர்களது தாங்குசக்தியையும், துணிவையும் நாம் கண்டுணர்கிறோம்.
மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்த உயர் ஆணையாளரின் கவலை எமக்கும் உள்ளது. துரதிஷ்டவசமாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இது வன்முறைக்கும், மோதலுக்கும் மீண்டும் வழிவகுக்கலாமென்பது வருத்தத்திற்குரியது. குடிசார் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை, குடிசார் சமூக செயற்பாட்டுக்கான வெளி, மனித உரிமைகளுக்;கான மதிப்பு, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகிய அனைத்தும் வலுவிழக்கச் செய்யப்படுகின்றன. முஸ்லிம்களின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது, தமிழர்களின் நினைவேந்தல்கள் மீதான கட்டுப்பாடுகள் என்பன நாட்டில் பிளவுகளை மேலும் அதிகரிக்கும்.
இலங்கையை நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதும், மீளிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதும் பேரவைக்குள்ள கடமையெனக் கனடா நம்புகிறது.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்துடன் ஆக்கபூர்வமான முறையில் ஈடுபாட்டைப் பேணுமாறும், மனித உரிமை நிபுணர்களுக்கு விடுத்த நிலையான அழைப்புகளை மதித்துச் செயற்படுமாறும் இலங்கையை ஊக்குவிக்கிறோம்.
உயர் ஆணையாளர் அவர்களே, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகம் சான்றுகளைத் திரட்டிப் பாதுகாப்பதற்கு நாடுகள் எவ்வாறு செயற்திறன் மிக்க முறையில் ஆதரவளிக்கலாம்? ”
Remarks by Lawyers Rights Watch Canada (NGO) on the OHCHR report on Sri Lanka
- Lawyers’ Rights Watch Canada
- ஐக்கிய நாடுகள் பொருளாhதார சமூக பேரவையில் சிறப்பு ஆலோசனைத் தகுதியுள்ள அரச சார்பற்ற அமைப்பு
- அமைப்பு: Lawyers’ Rights Watch Canada
- விடயம்: 2 ஆவது விடயம்: இலங்கை – மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அறிக்கை
- திகதி: ஃபெப்ரவரி 25, 2021
- பேச்சாளர்: ஹரினி சிவலிங்கம்
- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத்தொடரில், சிறப்பு ஆலோசனைத் தகுதியுள்ள Lawyers’ Rights Watch Canada (LRWC) அமைப்பின் வாய்மொழி மூல அறிக்கை
- இலங்கையில் தொடரும் குற்றம்புரிந்தோர் தண்டிக்கப்படாத நிலையும், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படாத நிலையும்
- பேரவைத் தலைவி அவர்களே,
- Lawyers’ Rights Watch Canada (LRWC) இலங்கை தொடர்பான அறிக்கைக்காக[1] உயர் ஆணையாளருக்கு நன்றி தெரிவிக்கிறது. இலங்கையில் நிலவும் குற்றம்புரிந்தோர் தண்டிக்கப்படாத நிலைமையைப் பேரவை உடனடியாகக் கருத்திற் கொள்ளவேண்டுமென்ற கரிசனையை நாமும் கொண்டுள்ளோம். தமிழ் மக்கள் மீது முன்னர் புரியப்பட்ட சட்டவிரோதமான கொலைகள், ஆள்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, தான்தோன்றித்தனமான தடுத்து வைத்தல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளடங்கலான மீறல்கள் தொடர்பாகப் பொறுப்புக் கூறப்படாதமையும், இந்தப் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டமையும், இவை மீள இடம்பெறும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கின்றன.
- மனித உரிமைப் பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரின் குரல்களை மௌனிக்கச் செய்யும் நோக்கத்துடன் இடம்பெறும் கட்டமைக்கப்பட்ட வகையான கண்காணிப்பு, தொந்தரவு மற்றும் மிரட்டல் என்பன எமக்குக் கவலையை ஏற்படுத்துகின்றன. அரசு – போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதை ஒடுக்குவதும், ஆர்ப்பாட்டங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதும், இராணுவ மயமாக்கப்பட்ட கோவிட்-19 ஒழுங்கமைப்பின் கீழ் முஸ்லிம் மற்றும் ஏனைய சிறுபான்மையினரின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவதும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தும் போக்குகளாக அமைகின்றன. இலங்கை தவறான பாதையில் செல்வதையும், நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான எந்த உள்நாட்டுப் பொறிமுறையும் வெற்றியளிக்கப் போவதில்லையென்பதையும் அறிகுறிகள் தெளிவாகக் காட்டுகின்றன. மனித உரிமை நிலைமை மேலும் சீர்குலைந்து செல்வதைத் தடுப்பதற்குச் சர்வதேச தலையீடு அவசரமாகத் தேவைப்படுகிறது.
- நாம் பேரவையிடம்:
- 1. இலங்கை மீதான கண்காணிப்பைப் பலப்படுத்துமாறும், சர்வதேச மட்டத்தில் பொறுப்புக் கூறலுக்கான வழிகளைச் செய்வதற்கான ஒருசீரான, செயற்திறனுள்ள, நேரக் கட்டுப்பாட்டைக் கொண்டது திட்டத்தை முன்வைக்குமாறும்;
- 2. இலங்கை நிலைவரத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பரிந்துரை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும்;
- 3. உறுப்பு நாடுகள் இலங்கையில் புரியப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கு சர்வதேச நியாயாதிக்கக் கோட்பாட்டைப் பயன்படுத்தி அவற்றின் தேசிய நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஊக்குவிப்பதுடன், இலங்கையில் பாரதூரமான மீறல்களைப் புரிந்ததாக அடையாளம் காணப்பட்டவர்கள் மீது பயணத் தடைகள், சொத்துக்களை உறைநிலையில் வைத்தல் போன்ற தண்டனைகளை விதிக்குமாறும் கோருகிறோம்.
- பேரவைத் தலைவி அவர்களே, உங்களுக்கு எமது நன்றி.