முனைவர் துரை மணிகண்டன் எழுதிய”இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணைய வழி கல்வி”வெளியிடப்பட்டது
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை இணைந்து நடத்திய கணித்தமிழ் பேரவை தொடக்க விழாவில் இணையத் தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் எழுதிய “இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணைய வழி கல்வி” என்ற நூலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ந. பஞ்சநதம் அவர்கள் வெளியிட பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் மூ.சௌந்தரராஜன் அவர்கள் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் மா கோவிந்தன், பேராசிரியர்கள் முனைவர் பாலகிருஷ்ணன், முனைவர் ப . கணேசன், முனைவர் மணி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.விஜயா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த நூலில் இந்தியாவில் பல்வேறு மொழிகளும் இனக்குழுக்களும் வாழ்ந்து வருகின்ற சூழலில் இணையத்தின் வழியாக உயர்கல்வியை அனைத்து வகை மாணவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய அரசாங்கம் பல்வேறு வகையான இணையதளங்கள் மூலமாக கல்வியை வழங்கி வருகின்றன என்றும் தொடர்ந்து
இந்த நூலாசிரியர் இந்நூலில் இணையவழிக் கற்றலின் வரலாற்றை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். மேலும் இந்தியாவில் ஸ்வயம்,mooc இணையவழிக் கல்வித்திட்டம் குறித்தும் விளக்கியுள்ளார். தொடர்ந்து NAD என்று அழைக்கப்படுகின்ற நேஷனல் அகாடமி டெபாசிட் என்ற இணையதளத்தின் சிறப்புகளையும், மெய்நிகர் நூலகங்கள் மூலமாக மாணவர்கள் எவ்வாறு இலவசமாக நூல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்.
தொடர்ந்து இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்றவர்களின் பெயர்களையும் அவர்களது படைப்புகளையும் இணையம் மூலம் இந்திய அரசு தொகுத்து வழங்கி வருக்கின்றது என்று சோத் கங்கா இணையதளத்தையும். மின் பாடசாலை என்ற இணையதளம் மூலம் பள்ளிக்கூட மாணவர்களின் பாடத்திட்ட நூல்களைப்
பதிவிறக்கம் செய்துகொள்ளும் வழிமுறைகளையும், இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் பொறியியல் மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை ஒருசேர பெற்றுக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இ- இயந்திரா இணையதளத்தையும், மெய்நிகர் ஆய்வகம் எவ்வாறு நமக்கு பயன்படும் என்பதையும் இந்த நூலில் தெளிவாக ஆசிரியர் விளக்கியிருப்பது இந்திய மாணவர்களுக்கு மட்டுமின்றி தமிழக மாணவர்களுக்கும் இந்த இணையதளங்கள் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதை இந்த நூலின் மூலமாக அறிமுகம் செய்துள்ளார்.
இதை நீங்கள் amazon.com வாங்கிப் படித்துப் பாருங்கள்