யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார முதல் நாள் நினைவேந்தல்
இன்று (21) யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணங்கள் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது



விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக கார்த்திகை 27 ஆம் திகதி, ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் நவம்பர் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.