யாழ் சுவடி நிறுவகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் சித்திரக் கண்காட்சி
Getting your Trinity Audio player ready...
|
சுவடி நிறுவகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் சித்திரக் கண்காட்சி செப்டம்பர் 09, 10 & 11 ஆகிய திகதிகளில் எழுதிரள், 209, பலாலி வீதி, கோண்டாவிலில் காலை 9 – மாலை 5 மணிக்கிடையில் இடம்பெறும்.
இச் சிறுவர் சித்திரக் கண்காட்சி சுவடி நிறுவகத்தால் முன்னெடுக்கப்படும் யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம்
செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகும். நல்லூர் உற்சவகாலத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட தரமான ஓவியங்கள் அனைத்தும் சிறுவர் சித்திரக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பான ஓவியங்களிற்குப் பரிசுகளும் பங்குபற்றிய அனைத்து மாணவர்களிற்கும் சான்றிதழ்களும் சிறுவர் சித்திரக் கண்காட்சியில் வைத்துக் கையளிக்கப்படவுள்ளன.
செப்டம்பர் 09, 10 & 11 ஆம் திகதிகளில் எம்முடன் இணைந்திருங்கள்! பல வண்ணங்களால் சிறுவர்கள் வெளிப்படுத்தும் எண்ணங்களைக் உணர்ந்து ஊக்கமளியுங்கள்!