HealthNationNews

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை

Getting your Trinity Audio player ready...

யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்த வைப்பின் அளவு மிகவும் மோசமான நிலைக்குத் தாழ்ந்துவிட்டதாகவும் தினசரி தேவைகளைச் சாமாளிக்க முடியாது வைத்தியசாலை நிர்வாகம் சிரமப்படுவதாகவும் தெரியவருகிறது.

வழமையான தேவைகளைச் சமாளிக்க 330 பைண்ட்டுகள் இரத்தம் இருப்பில் இருக்கவேண்டுமெனவும் ஆனால் தற்போதைய கையிருப்பு 181 பைண்டுகள் மட்டுமே என வைத்தியசாலைப் பேச்சாளர் கூறியதாக ‘சிலோன் ருடே’ செய்தி வெளியிட்டிருக்கிறது. அறுவைச்சிகிச்சை மற்றும் இதர தேவைகளுக்கென நாளொன்றுக்கு 50 பைண்டுகள் இரத்தம் தேவைப்படுகிறது. இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோயிருப்பதே இதற்குக் காரணமெனப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரத்ததான முகாம்களை வைத்தியசாலை தொடர்ச்சியாக நடத்திவருகின்றபோதும் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவருகிறது எனக் கூறப்படுகிறது-Photo:Jaffna Blood Bank – Fb

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!