NationNews

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை – உத்தரவு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையில் இருந்த பேரறிவாளனை (A. G. Perarivalan) விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

பேரறிவாளன் 1971 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி தமிழ்நாட்டின் ஜோலார்பேட்டையில் குயில்தாசன் என்ற ஞானசேகரன் மற்றும் அற்புதம் அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது பெற்றோர்கள் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை உருவாக்கிய பெரியாரின் ஆதரவாளர்கள். கைது செய்யப்படும் போது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தார். சிறையில் இருந்தபோதே இந்திரா காந்தி நேஷனல் ஓபன் யுனிவர்சிட்டி மூலம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் மற்றும் மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்பை முடித்தார். 2012ல், ப்ளஸ் டூ தேர்வில் கைதிகளில் 91.33 சதவீத மதிப்பெண்களுடன் அதிக மதிப்பெண் பெற்றார். 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்திய டிப்ளமோ பாடத் தேர்வில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தபோது தற்கொலை குண்டு தாக்குதல் மூலம் அவர் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் இவருடன் சிறை தண்டனை இருந்து வந்தனர்

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தம்மை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு இன்று பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பேரறிவாளன் போல மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை உறுதியாகச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!