வரலாற்றில் இன்றைய நாள் செப்டம்பர் 10

1509 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர்.
1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.
1780 – இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்: திப்பு சுல்தானின் படைகளுக்கும், பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடந்த போரில் பிரித்தானிய படை பேரிழப்புகளை சந்தித்தது.
1898 – ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் (படம்) சுவிட்சர்லாந்தில் கொலை செய்யப்பட்டார்.
2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் முழு உறுப்பு நாடாக இணைந்தது.
2008 – வரலாற்றில் மிகப்பெரும் அறிவியல் கருவியான பெரிய ஆட்ரான் மோதுவி ஜெனீவாவில் இயங்க ஆரம்பித்தது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!