வரலாற்றில் இன்றைய நாள் July 7
Today’s Important Historical Events ~July 7, 2021~ வரலாற்றில் இன்றைய நாள்
1456 – ஜோன் ஆஃப் ஆர்க் (படம்) குற்றமற்றவர் என அவர் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.
1865 – ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
1896 – இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1915 – சிங்கள-முசுலிம் கலவரம்: இலங்கையில் முசுலிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில் என்றி பெதிரிசு என்ற இராணுவ அலுவலர் கொழும்பில் தூக்கிலிடப்பட்டார்.
1980 – ஈரானில் இசுலாமியச் சட்ட முறைமை நடைமுறைக்கு வந்தது.
2005 – லண்டனில் 4 சுரங்கத் தொடருந்து நிலையங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் கொல்லப்பட்டனர்.