NationNewsWorld

வர முன்னே காப்போம் – இன்று முதல் இலங்கை முழுவதும் முப்படையினரும் வீதிகளில்

Getting your Trinity Audio player ready...

இன்று முதல் இலங்கை முழுவதும் முப்படையினரும் வீதிகளில் குறிக்கப்படுகின்றன “இது தமிழ் மக்களுக்கு புதிது அல்ல” ஆனால் சிங்கள மக்கள் இதை எப்படி எதிர் கொள்ளப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

“Using laws that don’t conform with international human rights standards – like the PTA – erodes democracy in Sri Lanka,” said US ambassador to Sri Lanka Julie Chung. தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

“வர முன்னே காப்போம்”

வர முன்னே காப்போம் இலங்கை முன்னாள் ஜனாதிபதி Gotabaya Rajapaksa வருவதற்கு முன்பு இந்த அறிவிப்பு.சொல்வதைச் செய்யும் ஜனாதிபதி Ranil Wickremesinghe?

இன்று (22) ஆம்திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் அமைதியை பேணுவதற்காக முப்படையினரையும் வரவழைத்து ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி வௌியீடு

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம்

இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு 19 ஆம் திகதி பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் பதவியேற்றதன் பின்னர் மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றன.

SL பாதுகாப்புப் பிரிவின் Photo

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு பெற்ற), பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, வான்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.ஆர். லமாஹேவாகே, இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் ஜெனரல் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க ஆகியோர் ஜனாதிபதியை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!