வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-13வது நாள்
11 வருடங்களாக, ஸ்ரீலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், கனடிய அரசிடம் நீதி கேட்டு மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் இலக்கினை நோக்கிய நெடுநடைப்பயணம். Walking 425 KM from Brampton, On. Canada to Parliament of Canada, Ottawa and Montreal to Ottawa. On. Seeking Justice for the Victims of Enforced Disappearances.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரும் நெடு நடைப்பயணநடை இலக்கை நெருங்குகின்றது
30.08.2020 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளில் பிறம்ரன் நகரசபை முன்றலில் இருந்து, ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, கனடிய,அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரி ஆரம்பித்த நெடு நடைப்பயணம் இன்றுடன் 12_ம் நாளைத் தொட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றது
05-09- 2020_அன்று மொன்றியால் வாழ் தமிழ் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட நெடு நடைப் பயணம் இன்றுடன் 6ம் நாளைத் தொட்டுத் தொடர்கிறது. இரு நடைப்பயணங்களும் 13/09/2020 அன்று ஒட்டாவா கால்ரன் பல்கலைக்கழக வளாகத்தில்,ஒட்டாவா வாழ் தமிழ் மக்கள் உட்பட, கனடிய தமிழ்ச் சமூகத்தால் அன்று மாலை வரவேற்கப்பட்டு, அன்றைய நாள் நிகழ்வு நிறைவு பெறும்.
இறுதி நாளான 14/09/2020 அன்று இணைந்து கொள்ளும் இரு நடைக் குழுக்கழுடன் ,பல் திசை வாழ் தமிழ் மக்களும் கால்ரன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடி இறுதியான இரு மணி நேர நடையை ஆரம்பித்து ஒட்டாவா பாராளுமன்ற திடலில் மதியத்தின் பின் நடைப்பயணம் நிறைவு பெறும். அங்கு நீதி கோரும் மகஜரை நடைபவனியின் இறுதியில் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளிடம் கையளிக்க உள்ளனர்.
இப்பெருமுயற்சிக்கு பேராதரவினை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ,உட்பட ஏனைய முன்னணி தமிழ்த் தேசிய அமைப்புக்கள்,தமிழ்ச்சங்கங்கள்,தமிழ்க்கொடையாளர்கள்,கட்டம் கட்டமாக நடைபயணத்தில் இணைந்து கொண்ட தமிழின உணர்வாளர்கள்,மற்றும் நெடுவழி எங்கும் ஆதரவு தந்த,பிற இன மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், குறிப்பாக இந் நிகழ்வை தம் தேசியக் கடமையாக சுமந்து வரும்,ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கும், தமிழினத்தின் சார்பில் நீதிக்கான நெடுநடைப் பயணக்குழு பணிவுடன் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. தொடர்ந்தும் இவ்வாதரவை இறுதி நாள் வரை தந்துதவ வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றது.
14/09/20 இறுதி நாளை சிறப்பிக்கும் பணியில் ரொறன்ரோவில் இருந்து பேருந்து வசதிகள் செய்யப்படுகின்றது.இது பற்றிய முழு விபர தொடர்புகட்கு:-கண்ணன் 6478087766_ விஜி:647783 3466, நிமால் 4168881128,மகாஜெயம் 6472625587
மொன்றியல் தொடர்புகளுக்குஜெறோம். 1-514-914-3099
குறிப்பு- கோவிட்-19 தொற்றுநோய் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது பொதுவான விதிமுறையாகும்
தொடர்ந்து நடப்பவர்களை பெயர் விவரம்
Toronto : David Thomas , Vijitharan Varadarajan, Mahajayam Mahalingam and Yogendra Vaisikamagapathy
இந்த நடை பவனியில் பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்about:blankFacebook URL
Embedded content from facebook.com can’t be previewed in the editor.
.
Montreal to Ottawa (திங்கட்கிழமை அன்று, காலை 10 மணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி நெடுந்தூரப் பயணம் தொடங்க இருப்பதால், மொன்றியலிலுள்ள மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.Should you wish to support or participate in the walk please contact: 514-726-9980 or 514-400-3716)
தொடர்ந்து நடப்பவர்களை பெயர் விவரம்
Montreal : Jogeswaran Nadesu, Gulendrasikamani Veluchamy and Vijayakumar Namasivayam
Montreal to Ottawa. Day 5- நடந்து 150 கிலோ மீட்டரை தாண்டி விட்டனர்
Embedded content from facebook.com can’t be previewed in the editor.
மேலதிக விவரங்களை பார்ப்பதற்கு CLICK routes and walking directions
1வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 1 – Brampton to Markham 52km complete
2வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 2 – Markham to Ajax 32km complete
3வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 3 – Ajax to Clarington 35km complete
4வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 4-Clarington to Hwy 28 and Ganaraska Rd – 29Km complete
5வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 5 – Bewdley to Baxter Rd 32.6km complete