வெற்றிகரமாக நடைபெற்ற “அன்புடன் தமிழ் 2021” இணைய வழி இசை நிகழ்வு !
021 பெப்ரவரி, 28 ஞாயிற்றுக்கிழமை அன்று ரொறொன்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைத் திட்டத்திற்கு ஆதரவாகக் ‘கனேடியத் தமிழர் பேரவை’ நடத்தியிருந்த “அன்புடன் தமிழ்” இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்திருக்கின்றது. உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், இந்த நிகழ்ச்சியை நேரடியாகக் கண்டுகளித்தனர்.
உலகெங்கிலும் உள்ள பதினாறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் பாடகர்கள் ஒற்றுமையுடன் ஒன்றுகூடி, உன்னத காரணத்திற்காக நடைபெற்ற இந்த இசை நிகழ்வில், தங்களது ஆற்றல்களை வெளிக்கொணர்ந்தனர். அவர்களது பங்களிப்பில் அன்பும், ஆர்வமும் இரண்டறக் கலந்த மகோன்னதம் மேலோங்கியிருந்தது.
பங்கேற்ற பாடகர்களின் பெயர்களும், நாடுகளும்:
இந்தியா – செந்தில் கணேஷ்
இலங்கை – கோகுலன் சாந்தன்
மலேசியா – ரி.எம்.எஸ் சிவகாந்தன்
சிங்கப்பூர் – சினேகா முரளி
ஜப்பான் – சங்கீதா பிரசாந்
தென்னாப்பிரிக்கா – யுவானி நாயுடு
கட்டார் – டாக்டர் சகாயா பிரவீன்
பிரிட்டன் – ஒய். யாதவன், எஸ். கஜன்
ஜெர்மனி – எஸ்.கண்ணன்
டென்மார்க் – ஸ்ரெவாஜா வி.சுயாபிரகாஷ்
சுவிஸ் – மிதுலா சிவானந்தராஜா
நோர்வே – ரமேஷ் தேவராஜா
நெதர்லாந்து – வி.எஸ்.ஜெயன்
ஆஸ்திரேலியா – ஐஸ்வர்யா அரவிந்த் & ஜிரே கணேசராஜா ஐஸ்வர்யா
அமெரிக்கா – கிருஷ்ணமூர்த்தி லக்சுமிநரசிம்மன்
மொன்றியல், கனடா – கௌரீஸ் சுப்பிரமணியம்
ரொறொன்டோ, கனடா – சாஹினா கனகராஜா
“எழுமின்” நிறுவனர் வண ஜெகத் கஸ்பர் ராஜ், சிறப்புமிகு உரையுடன், நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். FTENA தலைவர் திரு கால்ட்வெல் வேல்நம்பி மற்றும் கனடியத் தமிழர் பேரவைத் தலைவர் திரு சிவன் இளங்கோ ஆகியோரும், ரொறொன்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் குறித்துப் பேசியிருந்தனர். இந் நிகழ்வினை செல்வி அபிஷேகா லொயிட்சன் நெறிப்படுத்தினார்.
“மெகா ட்யூனர்ஸ்” புகழ் அரவிந்தன் மகேசன் நிகழ்வில் பங்களித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்காக ஒரு கோடி இந்திய ரூபாய்கள் (ஏறத்தாள 175,000 கனடிய டொலர்கள்) பங்களிப்பைக் கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது. ரொறொன்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையை உருவாக்கத் தேவையான மூன்று மில்லியன் டொலர்கள் இலக்கை அடைய, மேலும் 400,000 கனடிய டொலர்களைத் திரட்ட வேண்டியுள்ளது. அடுத்துவரும் அறுபது நாட்களில் நிதி திரட்டும் இலக்கை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “தமிழ் இருக்கை” உருவாக்கத்தில் தங்களையும் ஒருவராக இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
நிதியுதவி வழங்குவதற்கான ரொறொன்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை இணையத்தளம் : www.torontotamilchair.ca
மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து
Canadian Tamil Congress @ 647-300-1973 / dantont@canadiantamilcongress.ca ஐ தொடர்பு கொள்ளவும்