World

இரண்டாம் உலக யுத்தத்திற்கான காரணங்களும், விளைவுகளும்

நிச்சயமாக, இந்த ஒரேயொரு சொற்பொழிவுக்குள், போருக்கான பிரதான காரணங்களின் ஒரு வருந்தத்தக்க நெருக்கமற்ற விளக்கத்தை மட்டுமே வழங்க முடியும். ஆனால் இந்த சுருக்கமான விளக்கம், தேவையின்றி மிகவும்-எளிமைப்படுத்தாமல், தெளிவுபடுத்துவதற்காக, பிரிக்க முடியாதபடிக்கு ஒன்றையொன்று சார்ந்த அத்தியாயங்களாக முதலாம் உலக போரையும் மற்றும் இரண்டாம் உலக போரையும் கையாளும்.  

முதலாம் உலக போரின் தோற்றுவாய்கள்

1914இன் கோடையில் அந்நெருக்கடி கட்டவிழ்ந்த வேகம் பலரை ஆச்சரியத்தில் கொண்டு சென்றது. ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்ஸ் பேர்டினாண்ட் ஜூன் 28, 1914இல் சாரயேவோவில் படுகொலை செய்யப்பட்டமை, வெறும் ஐந்து வாரங்களுக்குள், ஒரு முழு-அளவிலான ஐரோப்பிய போருக்கு இட்டுச் செல்லுமென்பதை வெகுசிலரே அனுமானித்திருந்தனர். ஏப்ரல் 1917இல் அந்த மோதலில் அமெரிக்க நுழைவுடன் சேர்ந்து அது உலகளாவிய பரிணாமத்தை ஏற்குமென்பதை அவர்கள் முன்மதிப்பீடு செய்யவில்லை. ஒரு பேரழிவுகரமான இராணுவ மோதலுக்கான நிலைமைகள் அதற்கு முந்தைய பதினைந்து ஆண்டுகளில் முதிர்ந்து வந்திருந்தன, அந்த நிலைமைகள் உலக பொருளாதாரத்தின், மற்றும் அதன் விளைவாக உலக அரசியலின் வேகமான மாற்றங்களுடன் பிணைந்திருந்தன.

1914 வெடிப்புக்கு முன்னர், அங்கே 1815இல் நெப்போலியனிய போர்களின் முடிவுக்குப் பின்னரில் இருந்து ஐரோப்பிய “வல்லரசுகளுக்கு” இடையே பரந்த போர்கள் இருந்திருக்கவில்லை. வியன்னா மாநாடு, நாடுகளுக்கிடையிலான உறவுகளில் ஒப்பீட்டளவில் ஒரு ஸ்திரமான கட்டமைப்பை உருவாக்கி இருந்ததுடன், அது அந்நூற்றாண்டின் எஞ்சிய காலத்தில் நீடித்திருந்தது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டு சமாதானமாக இருந்தது என்பதை அர்த்தப்படுத்தாது. தேசிய-அரசு அமைப்புமுறை, குறிப்பிடத்தக்க தொடர்ச்சியான இராணுவ மோதல்களிலிருந்துதான் அதன் நவீன வடிவத்திற்கு வந்தது, அதில் மிகவும் இரத்தக்களரியோடு இருந்தது அமெரிக்க உள்நாட்டு போராகும். ஐரோப்பாவில், டென்மார்க் (1864), ஆஸ்திரியா (1866) மற்றும் இறுதியாக பிரான்ஸ் (1870) ஆகியவற்றிற்கு எதிராக திட்டமிட்டு இராணுவ படைகளை பிரயோகித்து பிஸ்மார்க் பிரஷ்யாவின் அரசியல் மேலாதிக்கத்தின் கீழ் நவீன ஜேர்மன் அரசின் உறுதிப்படுத்தலை ஏற்படுத்தினார். 1850களின் தொடக்கத்திலேயே, பிரிட்டனும் பிரெஞ்சும் கிறிமிய மோதலில் ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தின் புவிசார் அரசியல் அபிலாஷைகளை எதிர்த்தன. இருப்பினும் அந்த இராணுவ மோதல்கள் ஒப்பீட்டளவில் மட்டுப்பட்டு இருந்தன என்பதுடன், அது ஐரோப்பிய மற்றும் உலகளாவிய அரசியலின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் உடைவதற்கு இட்டுச் செல்லவில்லை.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!