2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் திகதியன்று, 492 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று கனடாவின் கரையை வந்தடைந்தது-Zoom மூலமான நிகர்நிலைப் பங்கேற்பு-ஆகஸ்ட் 13,2020
No matter where they came from or how they came, we must stand together to help and support refugees By:Gary Anandasangaree – Member of Parliament. 2015 Speech to the Throne on Refugees
2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆந் திகதியன்று,492 அகதிக் கோரிக்கையாளர்களை ஏற்றிய கப்பல் ஒன்று கனடாவின் கரையை வந்தடைந்தது. இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த வன்முறை, போர்க் குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றில் இருந்து இந்தத் தமிழ் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் தப்பி வந்தார்கள். பத்து வருடங்களின் பின், எம்.வி. சன் சீ யில் வந்தவர்களின் வாழிடமாகக் கனடா மாறியுள்ளது. பத்து வருடங்களுக்கு
முன்பு அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சிலர் தற்போதும் பாதிக்கப்பட்டிருந்தாலும், பலர் கனடாவில் பாதுகாப்புப் பெற்றவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பலர் கனேடிய குடியுரிமையும் பெற்றுள்ளார்கள். இருப்பினும், அவர்கள் எம்.வி. சன் சீ யில் மேற்கொண்ட பயணமும் அவர்களது கூட்டு அனுபவமும் அவர்களது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொடர்ந்து ஆழமாகப் பாதிக்கின்றன. கோவிட்-19 காரணமாகப் பாரிய நினைவு நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் எம்.வி. சன் சீ யில் வந்தவர்களில் ஒரு சிறிய குழுவினர், கப்பல் கனடாவை வந்தடைந்ததன் பத்தாவது ஆண்டை முன்னிட்டு பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்ரோறியாவில் ஒன்றுகூடி, தொடரும் அவர்களது பயணம் குறித்த அனுபவங்களைக் கனேடியர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.
திகதி: ஆகஸ்ட் 13, 2020
நேரம்: பி.ப. 1 மணி PST / பி.ப. 4 மணி EST
இடம்: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சட்டசபை, விக்ரோறியா, பிரிட்டிஷ் கொலம்பியா
Zoom மூலமான நிகர்நிலைப் பங்கேற்பு ID: 851 4070 6567 Pass-code: 737262
மேலதிக தகவல்களுக்கு: டொறீன் சவுந்தரநாயகம்
Gestionnaire des dossiersOffice of Gary Anandasangaree| Bureau de Gary AnandasangareeMember of Parliament for Scarborough-Rouge Park | Député de Scarborough-Rouge Park3600 Ellesmere Rd, Unit 3 | 3600, Ellesmere Road, bureau 3Scarborough, Ontario M1C 4Y8| Scarborough (Ontario) M1C 4Y8 Tel/Tél. :416-283-1414 |