Barbecue with டொராண்டோ Mayor Chow சமூக மக்களுடன் நேரடி சந்திப்பு
|
Getting your Trinity Audio player ready...
|
Barbecue with Mayor Chow சமூக மக்களுடன் நேரடி சந்திப்பு
டொராண்டோ: டொராண்டோ மேயர் ஒலிவியா சௌ அவர்களின் தலைமையில், “பார்பிக்யூ வித் Mayor Chow” என்ற சிறப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 7 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி TCEU 416 (Toronto Civic Employees Union) இணைப்பில், பிரைடில்வுட் மால் கார் நிறுத்துமிடத்தில் (2900 Warden Ave., Toronto, ON) சிறப்பாக நடந்தது.

















Mayor Chowவுடன் இணைந்து டொராண்டோ துணை மேயர், நகர சபை உறுப்பினர்கள், மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் (MPP), கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் (MP) மற்றும் டொராண்டோ அவசர மருத்துவ சேவையின் தலைமை அதிகாரி ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று சமூக மக்களுடன் கலந்துரையாடினர்.
Mayor Chow உரை
பார்பிக்யூ நிகழ்ச்சியில் உரையாற்றிய மேயர் ஒலிவியா Chow, டொராண்டோ நகர மக்களுக்கு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்:
TTC கட்டண (Fair) உயர்வும் இருக்காது என அறிவித்தார்.
நூலக சேவை விரிவாக்கம்: அக்டோபர் மாதம் 19 திகதி முதல், டொராண்டோ நகர நூலகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும் என தெரிவித்தார்.
நகர பாதுகாப்பு நடவடிக்கைகள்: ஒவ்வொரு ஆண்டும் 360 புதிய போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும், இதன் மூலம் நகர பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும் பல சமூக மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மேயர் சௌ தனது உரையில் வலியுறுத்தினார்.
