Bill 104 மசோதாவைப் பற்றிய தீர்ப்பு!
ஒன்ராறியோ: தமிழ் இனப்படுகொலை அறிவூட்டு வாரச் சட்டத்தின் மீதான மேன்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது
This initiative support: National Council of Canadian Tamils, Canadian Tamil Academy, Canadian Tamil Youth Alliance and Tamil Rights Group
This appeal concerns the constitutional validity of the Tamil Genocide
Education Week Act, 2021, S.O. 2021, c. 11 (the “TGEWA”). The Act’s preamble
purports to recognize that the Sri Lankan state perpetrated a genocide against the
Tamils leading up to and during the Sri Lankan Civil War. The Act’s operative
provisions proclaim the week ending May 18 (the date in 2009 on which the civil
war ended) as “Tamil Genocide Education Week”, and encourages Ontarians to
“educate themselves about, and to maintain their awareness of, the Tamil
genocide and other genocides that have occurred in world history” each year during that week.
2021 இல் ஒன்ராறியோ மாகாண அரசினால் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டம்’ (Bill 104) சாசனரீதியில் செல்லுபடியாகாது எனக்கூறி இலங்கைக் கனடியர் செயற்பாட்டு ஒன்றியம், பிறம்டன் இலங்கை – கனடியர் அமைப்பின் சார்பாக சேனா முனசிங்க மற்றும் பேராசிரியர் நெவில் ஹேவகே ஆகியோரால் ஒன்ராறியோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிவில் வழக்கை நீதிபதிகள் ஜே.மைக்கேல் ஃபெயர்பம், கதெறீன் வான் றென்ஸ்பேர்க், பெஞமின் சாமெற் ஆகியோர் இன்று, ஆகஸ்ட் 05, 2024, தள்ளுபடி செய்துள்ளனர்.
பிரதி வருடமும் மே 18 இல் முடிவடையும் வாரத்தை ‘தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக’ அறிவிக்கும் சட்டம் 2021 இல் ஒன்ராறியோ மாகாண அரசினால் சட்டமாக்கப்பட்டபோது அது “உரிமைகளுக்கும் சுதந்திரத்துகுமான கனடிய பட்டயத்தின் (Canadian Charter of Rights and Freedom) பிரிவுகள் 2(b), 15(1) படி, ஒன்ராறியோ வாழும் சிறிய சிங்கள சமூகத்தவரது கருத்துச் சுதந்திரத்தை மறுதலிக்கிறது எனக்கூறி ஒன்ராறியோ மாகாண சட்டமா அதிபருக்கு எதிராக சிங்கள சமூக அமைப்புகள் ஒன்ராறியோ உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த ஒன்ராறியோ உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்மின் ரீ. அக்பரலி ஜூன் 08, 2022 வழங்கிய தீர்ப்பில் வாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் எதுவுமில்லை எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தார். இத் தீர்ப்புக்கு எதிராக மேற்கூறப்பட்ட இரண்டு சிங்கள அமைப்புகளும் பேராசிரியர் ஹேவகே அவர்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தனர். இம் மேன்முறையீட்டு வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் இன்று அவ்வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளனர்.
இவ்வழக்கின் பிரதிவாதிகளாக ஒன்ராறியோ சட்டமா அதிபர், கனடிய மக்கள் தேசிய அவை (NCCT), கனடிய தமிழ் அக்கடெமி (CTA), கனடிய தமிழ் இளையோர் அமைப்பு (CTYA) மற்றும் தமிழர் உரிமைக் குழுமம் (TRG) ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்