NationNews

Canada தமிழ் சமூக மைய செயற்றிட்டம், கட்டிடத்தின் முதல் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது

சூழவுள்ள பகுதிகளினதும் பூர்வாங்க வடிவமைப்பொன்றை வெளியிட்டது. மேலதிகமாக அறிந்துகொள்ள இணைப்பைப் படியுங்கள் அல்லது இங்கே பார்வையிடுங்கள்.

இந்தப் பூர்வாங்க வடிவமைப்புகள் 311 ஸ்ரெயின்ஸ் வீதியின் வாய்ப்புகளும் கட்டுப்பாடுகளும் எங்ஙனம் தமிழ் சமூக மையத்திற்காக சாதகமாகப் பயன்படுத்தப்படலாம் என எடுத்துக்காட்டுகின்றன.

வடிவமைப்புக்கான அடிப்படை வழிகாட்டிகளாக ஐந்து விடயங்களை இயக்குனர் சபை மனதிலிருத்தியது: (1) கலந்தாய்வுகளின் அடிப்படையிலான சேவைத்திட்ட வெளிகள் (2) சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உறுதிப்பாடு (3) பூர்வகுடிக் குமுகங்களை மதித்தல் (4) குடியிருப்பாளர்களின் கரிசனங்களுக்கான தீர்வுகள் (5) தமிழ்ப் பண்பாடும் வரலாறும்.

தமிழரின் பாரம்பரியக் கட்டிடக்கலை (மைய முற்றம்), தமிழ்மொழியும் சங்க இலக்கியக் கோட்பாடுகளும் (ஐந்திணைகள்), புலப்பெயர்வையும் ஏதிலிவாழ்வையும் புகலடைவையும் உள்ளடக்கிய தமிழரின் அண்மைக்கால வரலாறு (கப்பல்) ஆகியவற்றால் வடிவமைப்பு அகத்தூண்டல் பெற்றுள்ளது.

வடிவமைப்புக்கான வழிகாட்டிகள் பற்றியும் அகத்தூண்டல்கள் பற்றியும் விபரங்களைப்பெற, இணைப்பைப் படியுங்கள் அல்லது www.tamilcentre.ca என்ற இணையத்தளத்தை நாடுங்கள். 

இந்த வடிவமைப்புகள் பற்றிய உங்கள் கருத்துகளை அறிய இயக்குனர் சபை ஆவலாய் உள்ளது. உங்கள் பின்னூட்டங்களை ஒக்டோபர் 13க்கு முன் எமது இணையத்தளத்தின் மூலம் வழங்குங்கள். அத்தோடு, வடிவமைப்புக்கு முந்திய ஆய்வு பற்றி மேலும் அறிந்துகொள்ள, ஒக்டோபர் 13 அன்று மாலை ஏழு மணிக்கு நடைபெறவிருக்கும் நிகர்நிலை குமுகப் பொதுக்கூட்டத்திலே கலந்துகொள்ளுங்கள். அதற்கு இங்கே பதிவு செய்யுங்கள்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!