EKuruvi Night வருடாந்த நிகழ்வு இம்முறை Ekuruvi Steps 2020 ஆக முன்னெடுக்கப்படுகிறது
Covid-19 வைரஸ் பரம்பல் காலத்தில் எமது உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. பல
ஆய்வுகள் நாளுக்கு 10,000 காலடிகள் நடைப்பயிற்சியின் பயன்களை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன.
ekuruvi Steps 2020Covid-19 இலிருந்து விடுதலையை நோக்கி காலடி எடுத்துவைப்போம் ,மீண்டும் இயல்பு வாழ்வை நோக்கி காலடி எடுத்து வைப்போம் , எங்கள் சிறு வியாபாரங்கள் மீண்டும் திறந்திட புதிய உத்வேகத்துடன் காலடி எடுத்து வைப்போம் . Covid-19இற்கு பின்னரான புதிய உலகத்தை நோக்கி காலடி எடுத்து வைப்போம் ..
10,000 Steps Per Day to Million steps over 100 Days
BMI யைக் குறைத்து உடல் எடையைப் பேணுவது, நீரிழிவு, இருதய நோய் என்பவற்றை வராது தடுப்பது, சக்தியை அதிகரிப்பது என்று பல பயன்களைக் கொண்ட இந்த நடைப்பயிற்சியைத் தொடர்ந்து 100 நாட்கள் என்று இலக்கு நிர்ணயித்து நிறைவேற்றுவதன் மூலம், நாளடைவில் அதுவே பழக்கமாகி உடல் ஆரோக்கியம் மேம்பட உதவும்.
இதனை ஊக்கப்படுத்தும் வகையில் EKuruvi Stepsஆக எமது நிகழ்வு இம்முறை மாற்றப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 10,000 காலடிகள் மூலம் நூறு நாளில் ஒரு மில்லியன் காலடிவுகள் என்ற இலக்கு கண்காணிக்கப்பட்டு ஊக்கமளிக்கப்படும். 100 நாட்கள் என்ற இலக்கில் இடையிடையே மருத்துவர்களுடனான Zoom காணொளி மாநாடு மூலமாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள ஒழுங்கு செய்யப்படும்.
நீங்கள் இதற்கு தரும் $ 100 டொலர்களுடன் நாங்கள் கொடுக்கும் $10 டொலருடன் $110 டொலர்களாக தாயகத்தின் கல்வி அபிவிருத்திக்கு வழங்கப்படும் .
1000 பேர் பங்குகொணடால் எங்கள் $10000 டொலர்களை இணைத்து $110,000 கல்விக்கான செயற்திட்டத்தை நிகழ்த்த உள்ளோம் . மேலும் உங்களை உலக அளவில் உங்களை அன்புடன் வரவேகின்றோம்.
10,000 Steps Per Day to Million steps over 100 Days
ஆகவே, இந்த நிகழ்வில் உங்களைப் பதிவு செய்வதன்மூலம், உங்கள் உடல் நலனையும் பேணி, எமது இளம் சந்ததியினர் வாழ்வின் மேம்பாட்டுக்கும் உதவ முடியும்.
இதில் வழங்கப்படும் நிதியுதவி தாயகத்தில் eகுருவியினால் இவ்வருடம் வழங்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு மில்லியன் இலங்கை ரூபா பணத்துடன் இணைக்கப்பட்டு பத்து மில்லியனை நோக்கி காலடி எடுத்து வழங்க இருக்கின்றோம்
எமது ஆரோக்கியத்தைப் பேணுவத்துடன் தாயகத்துக்கும் உதவுவோம்!
சென்ற ஆண்டு முள்ளிவாய்க்கால் 10வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு EKuruvi Light ஆக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
உங்கள் ஆதரவை வழங்க அழையுங்கள் நவஜீவன் அனந்தராஜ் 1416 272 8543