Global Tamil Summit on Indo-Lanka Relations | இந்திய-இலங்கை உறவுபற்றிய உலகளாவிய தமிழ் மாநாடு Survey
இந்திய-இலங்கை உறவுபற்றிய உலகளாவிய தமிழ் மாநாடானது (புது தில்லி, 2021) உலகெங்கணுமுள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இலங்கையிலும் இருந்து, பன்முகத்தன்மையுடைய வெளிகளிலும் விடயங்களிலும் செல்வாக்குச்செலுத்தக்கூடிய பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, இந்தியப் பிரதமரும் இந்திய மத்திய அரசும் இலங்கையிலே தமிழர்கள் எதிர்பார்க்கும் சமத்துவமும், நீதியும், அமைதியும், கௌரவமும் அடங்கிய தீர்வை 1987ன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலே முன்னெடுக்கவேண்டும் என ஒருமுகமாகக் கோரிக்கை முன்வைக்க முனைகிறது.
இந்தக் கருத்துக்கணிப்பானது இந்த மாநாட்டை ஒருங்கிணைப்பதற்கான அமைப்பின் உருவாக்கம் பற்றிய ஆரம்பக் கருத்துக்களையும் அதன் செயற்குழுவுடனான உங்கள் ஈடுபாட்டுக்கான ஏதுநிலைகள் பற்றியும் அறிய முற்படுகிறது.
மேலும் தகவல்: நவரத்தினம் ஸ்ரீநாராயணதாஸ் புது தில்லி மாநாடு செயற்பாட்டுக் குழு newdelhisummit@gmail.com
தயவுசெய்து இந்தக் கருத்துக்கணிப்பை 23 ஓகஸ்ட் 2020கு முன் பூர்த்தி செய்யவும். கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf2K_tWfkkDgH6MtGukU1CngHH6k2b7wcsCm4nAYDFeFhW1uw/viewform