Historical EventsNationNews

Jaffna Public Library யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு

தென்னாசியாவிலேயே மூன்றாவது பெரிய (அறிவுக் களஞ்சியமாக) நூலகமாக சிறந்து விளங்கிய யாழ்பொது நூலகம், ஈழத்தமிழர்களின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியமிக்க மருத்துவக் குறிப்புகள், ஓலைச்சுவடிகள் போன்ற சுமார் 97 ஆயிரத்திற்கும் மேலான விலை மதிக்க முடியாத பொக்கிச நூல்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. தமிழர் வரலாற்றின் அடையாளாச் சின்னமாக விளங்கிய யாழ் பொது நூலகம் 31 மே 1981 நள்ளிரவு 10 மணியளவில் தீ மூட்டப்பட்டது.

https://en.wikipedia.org/wiki/Burning_of_Jaffna_Public_Library1981 யாழ்ப்பாண நகரம் எரிப்பு அல்லது பொதுவாக யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு (Burning of Jaffna Public Library) என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் தேதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. 1981 மே 31 இரவு ஆரம்பமான இவ்வன்முறைகளின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன.இந்நிகழ்வு 20ம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாக் காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.

1989 ஆம் ஆண்டு தொலைபேசி அட்டை வெளியிடப்பட்டது கனடாவில் நிறுவனம் வெளியிட்டது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!