NationNews

NCCT-ஊடகவியலாளர் மாநாடு-“இமயமலைப் பிரகடனத்திற்கு” எதிர்ப்பு

GTF உலகத் தமிழர் பேரவையின் ‘இமயமலைப் பிரகடனத்திற்கு’ எதிராக பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் குரல் எழுப்புகின்றன இன்று (7) கனடியத் தமிழர் தேசிய அவை NCCT நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கனடியத் தமிழ் ஊடகங்கள் கலந்து கொண்ட போது

NCCT ஊடகப்பேச்சாளர் தேவா சபாபதி

இமயமலைப் பிரகடன குழுவில்
உலகத் தமிழ் பேரவை குழுவில் கனடிய தமிழர் பேரவை (CTC) உறுப்புரிமை வகித்து வருகிறது. CTC சார்பாக இராச்.தவரட்ணசிங்கம், ஆமெரிக்காவில் இருந்து மருத்துவர் இலயாஸ் ஜெயராசா மற்றும் இங்கிலாந்தில் இருந்து குகன் வேலுப்பிள்ளை ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்து தேநீர் அருந்தியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன அதை அடுத்து பலரின் எதிர்ப்புகளை எதிர் கொண்டு வருகின்றனர்

இமயமலைப் பிரகடன

ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும், சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை நாடு என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இமாலயப் பிரகடனத்தில் உள்ளடங்கியுள்ள 6 கூற்றுக்கள்:

1வது கூற்று

தங்களுடைய அடையாளம் மற்றும் பெருமையை இழந்துவிடுவோமா என்ற பயம் எந்த ஒரு சமூகத்திற்கும் ஏற்படாத வகையில் நாட்டின் பல்வகைமைத்தன்மையைப் பேணிப் பாதுகாத்தலும், ஊக்குவித்தலும்.

2வது கூற்று

பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளல், உள்நாட்டு உற்பத்தியையும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் ஏனையோரின் முதலீடுகளையும், பங்களிப்பையும் ஊக்குவிக்கக்கூடிய, இலங்கை ஒரு நடுத்தர வருமானம் பெறும் நாடாக வெற்றிப் பாதையில் செல்வதனை உறுதிப்படுத்தக்கூடிய பொருத்தமான அபிவிருத்தி மாதிரிகளைத் தெரிவு செய்தல்.

3வது கூற்று

மாகாண மட்டத்தில் போதுமானளவு அதிகாரப்பகிர்வினை உறுதிப்படுத்தியும், தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கக்கூடிய, சமத்துவம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சமமான குடியுரிமையை முன்னிலைப்படுத்தியதும் அதற்கான பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களை உள்ளடக்கியதுமான ஒரு அரசியலமைப்பை உருவாக்குதல், அதுவரை நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பில் உள்ளவாறான அதிகாரப்பகிர்வினைக் கண்ணியத்துடன் நடைமுறைப்படுத்தல்.

4வது கூற்று

ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டினுள் அதிகாரத்தைப் பகிர்தலும், மத, கலாச்சார மற்றும் ஏனைய அடையாளங்களை ஏற்று அத்தகைய அடையாளங்களுக்கு மதிப்பளிப்பதோடு இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப உழைப்பதும்.

5வது கூற்று

கடந்த கசப்பான காலங்களில் இருந்து கற்றுக்கொள்ள உறுதிகொண்டு, மீண்டும் இவ்வாறான துயரங்கள் ஒருபோதும் ஏற்படாதிருக்கப் பொறுப்புக்கூறல் உள்ளடங்கலாக, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஒப்புரவு அடைந்த ஓர் இலங்கைக்கான தூர நோக்கு.

6வது கூற்று

இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகளுக்கும் இதர சர்வதேசக் கடப்பாடுகளுக்கும் மதிப்பளித்து, சுயாதீனமான மற்றும் ஆற்றல் வாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதனூடாக இலங்கையானது ஜனநாயகத்துடன் கூடிய சமாதானமான, வளமான உலக நாடுகள் மத்தியில் தனது பெருமையை நிலைநாட்டுதல்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!