NationNews

Service Ontario வுக்கு இனிமேல் போகத் தேவையில்லை

ஒன்ராறியோ வாகனப் பதிவு இப்போது இணையவழியாகச் செய்யலாம்

ஒன்ராறியோவில் வாகனங்களை வாங்குபவர்களும் விற்பவர்களும் இனிமேல் அனைத்தையும் இணையவழியாகச் செய்துகொள்ள முடியும். இதுவரை வாகனங்களை வாங்குபவர்களும் விற்பவர்களும் தமது உரிமைப் பத்திரங்களைப் பதிந்துகொள்ள Service Ontario அலுவலகங்களுக்குப் போகவேண்டியிருந்தது. ஒன்ராறியோ மாகாண அரசு சமீபத்தில் அறிவித்த Digital Dealership Registration (DDR) திட்டத்தின்படி இப்பதிவுகள் அனைத்தையும் இனிமேல் இணையவழியாகச் செய்துகொள்ள முடியும்.

இத்திட்டம் (DDR) 2022 இல் முதன் முதலில் அறிமுகப்படுத்பட்டபோது ஒன்ராறியோவிலுள்ள வாகனம் விற்கும் வியாபாரிகள் ( Vehicle Dealership) மட்டுமே தமது வாகனப் பரிமாற்றங்களை இணையவழியாகப் பதியும் வசதி இருந்தது. தற்போது இத்திட்டம் தனியாரும் தமது பதிவுகளைச் செய்துகொள்ளும் வகையில் விரிவாக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் வாகனத்தை நீங்கள் ஒருவருக்கு பிரத்தியேகமாக விற்க விரும்பினால் அவற்றின் உரிமை மாற்றுப் பதிவுகளை இணையவழியாகச் செய்துகொள்ள முடியும். இது பற்றிய ஊடக அறிவிப்பை ஒன்ராறியோ மாகாண பொது மற்றும் வியாபார சேவைகள் அமைச்சர் காலிட் ரஷீத் வெளியிட்டிருக்கிறார்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!