Statement by the Prime Minister on the 11th anniversary of the end of the armed conflict in Sri Lanka முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

அறிக்கை

உடனடி வெளியீட்டுக்காக

இலங்கையில் போர் நிறைவுக்கு வந்தமையின் பதினோராம் ஆண்டு நினைவை முன்னிட்டுக் கனேடிய பிரதம மந்திரி விடுத்துள்ள அறிக்கை

மே 18, 2020 ஒட்டாவா, ஒன்றாரியோ பிரதம மந்திரயின் அலுவலகம்

கனேடியப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, இலங்கையில் போர் நிறைவுக்கு வந்ததன் ஆண்டு நிறைவை முன்னிட்டுப் பின்வரும் அறிக்கையை இன்று வெளியிட்டார்:

“இலங்கையில் போர் நிறைவுக்கு வந்தமையின் பதினோராவது ஆண்டு நினைவின்போது, பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், அன்புக்குரியவர்களையும் நான் மனதில் கொண்டுள்ளேன். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டம் உட்பட 26 வருட கால போர் குறித்தும், இழக்கப்பட்ட உயிர்கள், காயமடைந்த, காணாமல் ஆக்கப்பட்ட, அல்லது வீடுகளில் இருந்தும் சமூகங்களில் இருந்தும் இடம்பெயர்க்கப்பட்டோர் குறித்தும் மீள நினைத்துப் பார்ப்பதற்கான நேரமாக இது அமைகிறது.

“இந்தப் போரினால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பல கனேடியர்களைக் கடந்த பதினொரு வருடங்களில் நான் சந்தித்துள்ளேன். கணக்கிட முடியாத இழப்பு, மிகப்பெருந் துன்பம், தொடர்ந்து மீண்டெழுதல் என்பன குறித்து அவர்கள் கூறியவை, நீடித்திருக்கும் அமைதி, மீளிணக்கம் என்பவற்றுக்காகத் தொடர்ந்து பணியாற்றவேண்டியதை நினைவுபடுத்துகின்றன.

“கடந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்வது எதிர்காலத்துக்கு இன்றியமையாதது. இலங்கை அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் நடைமுறையைப் பின்பற்றவேண்டுமென்ற கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். நாட்டில் நீண்டகால அடிப்படையில் அமைதியையும் செல்வச்செழிப்பையும் ஏற்படுத்துவதற்கு உறுதுணையான நீதி, மீளிணக்கம், அனைவரையும் உள்வாங்குதல் போன்றவற்றுக்காகப் பணியாற்றும் இலங்கை அரசு உட்பட்ட அனைவருக்கும் கனடா அதன் தொடர்ச்சியான ஆதரவை வழங்குகிறது.”

கனடா மேலும் பலமடைவதற்கு அதன் பன்முகத்தன்மையும், இந்த நாட்டைத் தமது நாடாக ஏற்றுக் கொண்ட பல்வேறு பண்பாடுகள், பாரம்பரியங்கள் என்பனவும் காரணமாக அமைகின்றன.

May 18, 2020
Ottawa, Ontario

The Prime Minister, Justin Trudeau, issued the following statement today on the anniversary of the end of the armed conflict in Sri Lanka:

“As we mark the 11th anniversary of the end of armed conflict in Sri Lanka, my thoughts are with the victims, their families and loved ones. This is a time to reflect on the 26 years of conflict, including the last phase of the war in Mullivaikal, and the lives that were lost, and to remember those who were injured, went missing, or were displaced from their homes and communities.

“Over the past 11 years, I have met with many Canadians, who were personally affected by this war. Their stories of incalculable loss, tremendous adversity, and continued resilience are a solemn reminder of the need to continue working toward lasting peace and reconciliation.

“Learning from the past is crucial to building for the future. I reiterate the call for Sri Lanka to pursue a meaningful accountability process. Canada continues to offer its support to the Sri Lankan government and all those working toward justice, reconciliation and inclusion, all of which underpin long-term peace and prosperity in the country.”

“Canada is made stronger by its diversity, and the many cultures and heritages that that call this country home.”

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!