LiVe நேரடி ஒளிபரப்பு

Tamil Journey 86 35th Anniversary – Live ஆகஸ்ட் 11, 2021 @12:30 pm

1986 இல் கனடா நோக்கிய தமிழ் மக்களின் பயணம் ஒன்று – 35 வது ஆண்டுவிழா
1986 ஆம் ஆண்டு, 155 தமிழ் அகதிகள் உயிர் காக்கும் படகுகள் மூலம், நியூஃபவுண்ட்லான்ட் கடற்கரையில் வந்திறங்கிய போது, கனடிய ஊடகங்கள் யாவற்றிலும் அந்த நிகழ்வு தலைப்புச் செய்திகளாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
அவர்களின் பயணக் கதையானது, நம்பிக்கையுடன் கூடிய மனித உயிர் வாழ்தலின் வேட்கையைக் கொண்டதாக இருந்தது. உலகெங்கும் இருந்து வரும் அகதிகளை வரவேற்கும் வழிவகையினதாக கனடியத் தாராள மனப்பான்மையின் கதையாகவும் அது இருந்தது.
இந்நிகழ்வு நடைபெற்றுப் பல வருடங்களுக்குப் பிறகும், தங்களைக் காத்த அந்த நியூஃபவுண்ட்லான்ட் மீனவர்கள், தங்கள் மீது காட்டிய அன்பையும், பரிவையும் உயிர் தப்பிய அந்த தமிழ் பயணிகள் இன்றும் நினைவி்ல் கொள்கின்றனர்.
35 ஆண்டுகளுக்கு முன்பாகக் கனடிய வரலாற்றில் நிகழ்ந்த இந்தத் தனித்துவமான தருணத்தை நினைவுகூர , கனடியத் தமிழர் பேரவை இணையவழி நிகழ்வொன்றினை எதிர்வரும் ஆகஸ்ட் 11, 2021 புதன்கிழமை மதியம் 12:30 மணிக்கு நடத்துகிறது.
கனடியத் தமிழ் அகதிகள் வரலாற்றில் நடைபெற்ற
முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை நினைவுகூர்ந்து, தமிழ் அகதிகள் வாழ்வில் புதிய வாய்ப்பு ஒன்றினை வழங்கிய கனடிய நாட்டைக் கொண்டாடுவதுடன், கடலில் தமிழ் அகதிகளைக் காப்பாற்றிய உள்ளூர் நியூஃபவுண்ட்லான்ட் மீன்பிடிக் குழுவினரையும் அவர்களை அழைத்துச் சென்று ஆதரித்த சமூகத்தையும் கனடியத் தமிழர்கள் பாராட்டுகிறார்கள்.
இந்நிகழ்வின் இறுதியில், (hybrid live documentary) காலத்தின் அலைகள் என்ற ஆவணப்படம் காண்பிக்கப்படும்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!