நிகழ்வுகள்-Events

TCC- சமூக மையத்தை வடிவமைக்க கட்டடக்கலை நிறுவனத்தைத் தேடி த.ச.மை RFQ

சமூக மையத்தை வடிவமைக்க கட்டடக்கலை நிறுவனத்தைத் தேடி த.ச.மை RFQ (மேற்கோள் கோரிக்கையை) வெளியிடுகிறது

எமது சமூக மையத்தை வடிவமைக்க ஒரு முதன்மை ஆலோசனை நிறுவனத்தைத் தேடி த.ச.மை RFQஐ (மேற்கோள் கோரிக்கையை) உற்சாகத்துடன் வெளியிடுகிறோம். குமுகத்துடனான ஆலோசனைகளின் அடிப்படையில் சமூக மையத்தை உயிர்ப்பிக்கும் கட்டடக்கலை நிறுவனமாக இது அமையும். அதற்கான RFQ ஆவணங்களை நீங்கள் இங்கே அணுகலாம், இதற்கு பதிவு செய்யப்பட்ட மெர்க்ஸ் (Merx) கணக்கு தேவைப்படும். சமர்ப்பிக்க ஆர்வமுள்ள ஆதரவாளர்கள் உங்கள் ஆர்வத்தை மே 22க்குள் தெரிவிக்கவும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மே 31. தயவுசெய்து இந்தச் செய்தியைப் பரப்ப உதவுங்கள்!

நினைவூட்டல் – எமது செயற்குழுக்களில் இணைந்து வாரத்திற்கு குறைந்தது ஐந்து மணித்தியாலங்களையாவது செலவிடக்கூடிய அர்ப்பணிப்பும் அனுபவமும் உடைய தன்னார்வத்தொண்டர்களை தேடுகிறோம். செயற்குழுக்கள் மற்றும் சுட்டுகை விதிமுறைகள் பற்றி அறியவும், விண்ணப்பம் சமர்ப்பிக்கவும் இங்கே காணவும். காலக்கெடு மே 22.

News by:TCC https://tamilcentre.ca/en/

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!