NationNews

TGTE தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த சில வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு-ஊடக சந்திப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த சில வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு-ஊடக சந்திப்பு – மே மாதம் 1ம் தேதி

TTJ Canada

கனடா நாடுகடந்த அரசவை தேர்தலில் அநீதிகள் இடம்பெற்றதாக குற்றச்ச்சாட்டு.
இந்த புதிய சிக்கலுக்கு தீர்வுகளை கிடைக்குமா நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமைப்பணிமனை?
தற்போதைய நான்காவது தவணைத்தேர்தல் முன்னெடுப்புகளில் அநீதிகள் இழைக்கப்பட்டு முன்னாள் அரசவை உறுப்பினர்கள் செயல்பாட்டாளர்கள் புதிய போட்டியாளர்கள் உள்ளிட்ட 14 பேர் முறையான காரணங்கள் இன்றி வெட்ப்புமனுக்கள் நீராகரிக்கப்பட்டது தொடர்பிலான பொதுமக்கள் மற்றும் ஊடக சந்திப்பு ஒன்று நேற்றுமாலை நடைபெற்றது. இதில் பெருமளவான பொதுமக்களும் ஆதரவாளர்களும் ஊடகங்களும் கலந்துகொண்டனர். கனடாவுக்கான தேர்தல் ஆணையகத்தின் நடைமுறைக்கு புறம்பான செயல்பாடுகளை கண்டித்து தமது அதிருப்திகளை போட்டியாளர்களும் நாடுகடந்த அரசின் ஆதரவாளர்கள்பலரும் வெளிப்படுத்தியிருந்தனர். முறைக்கு புறம்பான தேர்தலை நிறுத்தி கடந்த காலங்களைப்போன்று ஜனநாயகமுறையில் தேர்தலை நடாத்தவேண்டுமெனவும். வெளிப்படைத்தன்மையுள்ள தேர்தல் ஆணையகம் ஒன்று நிறுவப்படவேண்டுமென்பதையும் அனைவரும் வலியுறுத்தி நாடுகடந்த கனேடிய கிளையின் தற்போதைய தேர்தல் தொடர்பான செயல்பாடுகளை கண்டித்திருந்தனர். தேர்தல் ஆணையகம் ஊடக சந்திப்பு ஒன்றை வெளிப்படையாக நடாத்தி தற்போதைய சீர்கேடுகளுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வுகள் எட்டப்பட்டு நாடுகடந்த அரசு அதன் புனிதத்தன்மையை பாதுகாக்கவேண்டுமென்பதையும் ஊடகவியலாளர்கள் ஏகமனதாக வேண்டிக்கொண்டனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க முதலில் விடுக்கப்பட்ட அறிக்கை

logo copyright TGTE

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!