The Tamil Community Centre is hosting a virtual community townhall on Wednesday, October 13 at 7PM
தமிழ் சமூக மையம் கடந்த வாரம் வெளியிட்ட வடிவமைப்புக்கு முந்திய ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஒக்டோபர் 13 அன்று மாலை ஏழு மணிக்கு நிகர்நிலைக் குமுகப் பொதுக்கூட்டமொன்றை நடத்தவிருக்கிறது. அதில் கலந்துகொள்வதற்கு இங்கே பதிவு செய்யுங்கள்.
கடந்த வாரம் தமிழ் சமூக மைய கட்டிடத்தின் வடிவமைப்புக்கு முந்திய ஆய்வொன்றை வெளியிட்டோம். அதை இங்கே பார்வையிடுங்கள் உங்கள் பின்னூட்டங்களை இங்கே வழங்குங்கள்.

வடிவமைப்புக்கு முந்திய ஆய்வானது 311 ஸ்ரெயின்ஸ் வீதியின் வாய்ப்புகளும் கட்டுப்பாடுகளும் எங்ஙனம் தமிழ் சமூக மையத்தால் சாதகமாகப் பயன்படுத்தப்படலாம் என எடுத்துக்காட்டுகிறது.
வடிவமைப்புக்கான அடிப்படை வழிகாட்டிகளாக ஐந்து விடயங்களை நாம் மனதிலிருத்தினோம்: (1) கலந்தாய்வுகளின் அடிப்படையிலான சேவைத்திட்ட வெளிகள் (2) சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உறுதிப்பாடு (3) பூர்வகுடிக் குமுகங்களை மதித்தல் (4) குடியிருப்பாளர்களின் கரிசனங்களுக்கான தீர்வுகள் (5) தமிழ்ப் பண்பாடும் வரலாறும்.
தமிழரின் பாரம்பரியக் கட்டிடக்கலை (மைய முற்றம்), தமிழ்மொழியும் சங்க இலக்கியக் கோட்பாடுகளும் (ஐந்திணைகள்), புலப்பெயர்வையும் ஏதிலிவாழ்வையும் புகலடைவையும் உள்ளடக்கிய தமிழரின் அண்மைக்கால வரலாறு (கப்பல்) ஆகியவற்றால் வடிவமைப்பு அகத்தூண்டல் பெற்றுள்ளது.
வடிவமைப்புக்கான வழிகாட்டிகள் பற்றியும் அகத்தூண்டல்கள் பற்றியும் விபரங்களைப்பெற, இணைப்பைப் படியுங்கள் அல்லது www.tamilcentre.ca என்ற இணையத்தளத்தை நாடுங்கள். நிகர்நிலைக் குமுகப் பொதுக்கூட்டத்திலே உங்களை காண்பதற்கும் இந்த வடிவமைப்புகள் பற்றிய உங்கள் கருத்துகளை அறியவும் ஆவலாய் உள்ளோம்.