Todays Important Historical Events ~13June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்
Todays Important Historical Events ~13June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்
1774 – அடிமைகள் இறக்குமதியை றோட் தீவு தடை செய்தது. வட அமெரிக்கக் குடியேற்றங்களில் அடிமை இறக்குமதியைத் தடை செய்த முதல் நாடு இதுவாகும்.
1917 – முதலாம் உலகப் போர்: இலண்டன் நகர் மீது செருமனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.
1925 – சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.
1983 – பயனியர் 10 நெப்டியூனின் சுற்றுவட்டத்தை எட்டி, மத்திய சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் என்ற சாதனையை எட்டியது.
2000 – தென்கொரியாவின் அரசுத்தலைவர் கிம் டாய் ஜுங், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லை வடகொரியத் தலைநகர் பியொங்யாங்கில் சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
2006 – நியூ ஹரைசன்ஸ் (படம்) விண்கலம் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 ஏபிஎல் என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.