Historical Events

Todays Important Historical Events ~15June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்

Todays Important Historical Events ~15June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்

1667 – முதலாவது மனித குருதி மாற்றீடு மருத்துவர் சான் பாட்டிசுட் தெனி (படம்) என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
1752 – மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார்.
1844 – இயற்கை இறப்பர் பதப்படுத்தும் முறை சார்லசு கூடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
1846 – அமெரிக்கா, கனடா ஆகியவற்றின் எல்லைக்கோடு ராக்கி மலைத்தொடர் முதல் உவான் டெ பூக்கா நீரிணை வழியாக வரையப்பட்டது.
1878 – குதிரை ஒன்று ஓடுகையில் அதன் நான்கு கால்களும் தரையில் படுவதில்லை என்பதை நிறுவும் புகைப்படங்களை எதுவார்து மைபிரிட்ச் என்பவர் எடுத்தார். இவ்வாய்வே பின்னர் அசையும் திரைப்படம் உருவாக மூலமாக அமைந்தது.
1888 – முடிக்குரிய இளவரசர் வில்லியம் செருமானியப் பேரரசின் கடைசி மன்னராக முடிசூடினார். 1888 இல் முதலாம் வில்லியம், மூன்றாம் பிரெடெரிக் ஆகிய மன்னர்கள் இறந்ததனால், இவ்வாண்டு செருமனியின் மூன்று பேரரசர்களின் ஆட்சி ஆண்டு ஆகும்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!