Todays Important Historical Events ~17 June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்
Todays Important Historical Events~17June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்
1631 – மும்தாசு மகால் (படம்) பிள்ளைப்பேற்றின் போது இறந்தார். அவரது கணவர் முகலாயப் பேரரசர் ஷாஜகான் அடுத்த 17 ஆண்டுகளுக்கு மும்தாசுக்கான நினைவுச்சின்னமான தாஜ்மகாலைக் கட்டுவதில் முனைந்தார்.
1885 – விடுதலைச் சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது.
1911 – செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி பிரித்தானிய ஆட்சியாளர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தார்.
1939 – பிரான்சில் கடைசித் தடவையாக பகிரங்கமாகக் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1940 – எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய மூன்று பால்ட்டிக் நாடுகளும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டினுள் வந்தன. 1991 இலேயே இவை விடுதலை பெற்றன.
1953 – பெர்லினில் கிழக்கு ஜெர்மனி அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1967 – அணுகுண்டு சோதனை: சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது.