Todays Important Historical Events ~18 June2021~ வரலாற்றில் இன்றைய நாள்
19 June2021~ வரலாற்றில் இன்றைய நாள்
1586 – வட அமெரிக்காவில் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியிருப்பை அமைப்பதில் தோல்வியடைந்ததை அடுத்து ஆங்கிலேயக் குடியேறிகள் ரோனோக் தீவில் இருந்து வெளியேறினர்.
1862 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க மாநிலங்களில் அடிமை முறையைத் தடை செய்தது.
1867 – மெக்சிகோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் (படம்) மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
1987 – எசுப்பானியாவில் கடைத்தொகுதி ஒன்றில் எட்டா விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1988 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் புனிதர் பட்டமளித்தார்.
1991 – அங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
2012 – விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்சு இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார். 2019 இல் கைது செய்யப்படும் வரை அங்கேயே அவர் தங்கியிருந்தார்.