Todays Important Historical Events ~20 June2021~ வரலாற்றில் இன்றைய நாள்
20 June2021~ வரலாற்றில் இன்றைய நாள்
உலக அகதிகள் நாள்
1837 – விக்டோரியா பிரித்தானியாவின் பேரரசியாக முடிசூடினார்.
1840 – சாமுவெல் மோர்சு தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1858 – இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (படம்) குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.
1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக முறை தொலைபேசி சேவையை கனடாவில் ஆரம்பித்தார்.
1921 – சென்னையில் பக்கிங்காம், கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள் நான்கு-மாதப் பணி நிறுத்தத்தை ஆரம்பித்தனர்.
1944 – சோதனை ஏவுகணை எம்.டபிள்யூ 18014 வி-2 176 கிமீ உயரத்தை அடைந்து வெளியுலகிற்குச் சென்ற முதலாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்ற சாதனை படைத்தது.
1990 – இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் இலங்கைப் படைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.